Published:Updated:

அஜித் பிறந்த நாளில் அமர்க்களம் ரீரிலீஸ்!

அஜித் பிறந்த நாளில் அமர்க்களம் ரீரிலீஸ்!
அஜித் பிறந்த நாளில் அமர்க்களம் ரீரிலீஸ்!

சரண் இயக்கத்தில் அஜித் - ஷாலினி நடித்து 1999ல் வெளியான படம் 'அமர்க்களம்'. அஜித்தின் 25வது படமாக வெளியாகி படம் ரசிகர்களிடத்திலும் வணிக ரீதியிலும் திருப்தியளித்தது. பரத்வாஜ் இசையமைத்த இப்படத்திற்கு  ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

வருகிற மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு 'அமர்க்களம்' படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. படத்தின் ஒளி மற்றும் ஒலி மெருகேற்றி ரிலீஸ் செய்ப்பட இருக்கிறதாம் 'அமர்க்களம்'.

இதற்குமுன் சிவாஜி நடித்த 'கர்ணன்' எம்ஜி.ஆர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' ரஜினி நடித்த 'சிவாஜி' போன்ற படங்கள் தொழில்நுட்ப மாற்றங்களுடன் மறுவெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'காதல்மன்னன்' வெற்றிக்குப் பிறகு சரணுடன் கைகோர்த்த இரண்டாவது படம், அஜித்தின் 25வது படம், இப்படத்தின் போது  அஜித் - ஷாலினி காதல் மலர்ந்து திருமணத்தில் இணைந்தது என பல வகையில் அஜித் வாழ்வில் முக்கியமான படமானது 'அமர்க்களம்'.

இப்படமே அஜித் பிறந்தநாளான மே 1ல் மறுவெளியீடாக வருவது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை அதிகப்படுத்தும் என்பது உறுதி.