Published:Updated:

அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

விகடன் விமர்சனக்குழு
அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!
அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

'வாமனன்' படத்திற்குப் பிறகு ஐ.அஹமத் இயக்கிய படம் 'என்றென்றும் புன்னகை'. இதில் ஜீவா, சந்தானம், வினய், த்ரிஷா, ஆண்ட்ரியா, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர்.

'என்றென்றும் புன்னகை' படத்திற்குப் பிறகு அஹமத் இயக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.

அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்!

தற்போது ஏ.ஜெகதீஸ் இயக்கும் 'நண்பேன்டா' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் உதயநிதி அப்படத்திற்குப்  பிறகு தொடர்ந்து இரு படங்களில் நடிக்கிறார். அதில் அஹமத் இயக்கும் படமும் ஒன்று.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஹமத் இயக்கிய 'என்றென்றும் புன்னகை' படத்தை ரெட்ஜெயன்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.