Published:Updated:

தமிழ் சினிமாவுக்கு ஐந்து தேசிய விருதுகள்!

விகடன் விமர்சனக்குழு
தமிழ் சினிமாவுக்கு ஐந்து தேசிய விருதுகள்!
தமிழ் சினிமாவுக்கு ஐந்து தேசிய விருதுகள்!

'கற்றது தமிழ்' படத்திற்குப் பிறகு ராம் இயக்கிய படம் 'தங்கமீன்கள்'. இப்படத்தில் ராம், சாதனா, ஷெல்லி கிஷோர், ரோஹினி உட்பட பலர் நடித்திருந்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்திற்கு அரபிந்து சாரா ஒளிப்பதிவு செய்திருந்தார். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ஃபோட்டோன் கதாஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.

தமிழ் சினிமாவுக்கு ஐந்து தேசிய விருதுகள்!

இப்படம் 61வது தேசியவிருதுப் பட்டியலில், மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த பிராந்திய மொழித் திரைப்படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த பாடலாசிரியர் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றிருக்கிறது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது சாதனாவிற்கும், சிறந்த பாடலாசிரியருக்கனா தேசிய விருது 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' பாடலுக்காக நா.முத்துக்குமாருக்கும் வழங்கப்படுகிறது.

மேலும், தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தியதற்காக பாலுமகேந்திராவின் 'தலைமுறைகள்' படத்திற்கும், சிறந்த படத்தொகுப்பிற்காக 'வல்லினம்' படத்தின் படத்தொகுப்பாளர் சாபு ஜோசப்புக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.