Published:Updated:

விஜய் சேதுபதிக்கு ஜோடியான பிந்து மாதவி!

Vikatan Correspondent
விஜய் சேதுபதிக்கு ஜோடியான பிந்து மாதவி!
விஜய் சேதுபதிக்கு ஜோடியான பிந்து மாதவி!

'வசந்தகுமாரன்' படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் பிந்து மாதவி. தமிழ் சினிமாவின் ஆயிரத்துச் சில்லரையாவது காதல் கதை என்ற அடைமொழியுடன் தயாராகும் படம் 'வசந்த குமாரன்'.

ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் சார்பாக சுரேஷ் களஞ்சியம் இப்படத்தைத் தயாரிக்கிறார். ஆனந்த் குமரேசன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியான பிந்து மாதவி!

'இடம் பொருள் ஏவல்', 'புறம்போக்கு', 'மெல்லிசை' படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி இதில் நடிக்கிறார்.

 'கலக்குற மாப்ளே’, 'தமிழுக்கு எண்1-ஐ அழுத்தவும்’, கன்னடத்தில் ஒரு படம் என பிஸி ஷெட்யூலில் இருக்கும் பிந்து மாதவி முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் 'வசந்த குமாரன்' படத்தின் மூலம் சேர்ந்து நடிக்கிறார்.