Published:Updated:

வில்லன் லிங்கா பராக்... பராக்..! வேட்டை ஆரம்பம்

வில்லன் லிங்கா பராக்... பராக்..! வேட்டை ஆரம்பம்
வில்லன் லிங்கா பராக்... பராக்..! வேட்டை ஆரம்பம்

வில்லன் லிங்கா பராக்... பராக்..! வேட்டை ஆரம்பம்

ட்புக்கும் நன்றிக்கும் மறுபெயர் ரஜினி. குருநாதர் கே.பாலசந்தருக் காக 'தில்லுமுல்லு’, 'வேலைக் காரன்’, 'முத்து’, 'குசேலன்’ படங்களில் நடித்துக்கொடுத்தார் ரஜினி. தன்னுடைய சென்னை அண்ணன் எஸ்பி.முத்துராமனுக்காக 'பாண்டியன்’, மறைந்த வி.கே.ராமசாமி மற்றும் பண்டரிபாய்க்காக 'அருணாச்சலம்’, பழைய நண்பர்களுக்காக 'வள்ளி’, 'படையப்பா’, தன் இளைய மகளுக்காக 'கோச்சடையான்’ நடித்துக்கொடுத்திருப்பவர், இப்போது பெங்களூர் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்டுக்காக 'லிங்கா’வைத் தொடங்கியிருக்கிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் என்றாலும், 'லிங்கா’ பட பிசினஸில் வரும் லாபத்தின் ஒரு பகுதி, சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்டுக்குத்தான் சேரும்.

சுருள் முடி, முறுக்கு மீசை என கிராமத்து கெட்டப்பில் ரஜினி இருக்கும் பூஜை படங்கள் ரிலீஸ் ஆனதுமே கோலிவுட்டில் பரபரப்பு.

வில்லன் லிங்கா பராக்... பராக்..! வேட்டை ஆரம்பம்

லிங்கா படத்தின் கதை என்ன?

ஹீரோயிசம் 25 சதவிகிதம், வில்லத்தனம் 75 சதவிகிதம் கொண்ட கதையாம் லிங்கா.

மொகலாய மன்னன் ஷாஜகான், தன் மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகால் கட்டி முடித்தபோது, அதைக் கட்டிய கட்டடக் கலை நிபுணர் அதே போல் இன்னொரு கட்டடத்தைக் கட்டிவிடக் கூடாது என்பதற்காக அவரைச் சிறையில் அடைத்து தண்டனை கொடுத்தாராம். அந்த நிபுணர் கொடுத்த சாபத்தின் காரணமாக இப்போதும் தாஜ்மகாலில் ஏதோ ஒரு பகுதியில்

வில்லன் லிங்கா பராக்... பராக்..! வேட்டை ஆரம்பம்

தண்ணீர் ஒழுகிக்கொண்டே இருக்கிறது. எவ்வளவு பெரிய கட்டடக் கலை நிபுணராலும் அதை அடைக்க முடியவில்லை என்பது இன்றும் நிலவிவரும் ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் 'லிங்கா’வின் ஒன் லைன். தாஜ்மகாலை அப்படியே ஓர் அணையாக மாற்றி, கட்டடக் கலை நிபுணரின் வாரிசாக ரஜினி நடிக்க இருக்கிறாராம்.

கதைப்படி, அணைப்பாலத்தின் வழியாகச் செல்லும் பலர், அடிக்கடி விபத்துக்கு ஆளாகிறார்கள். அணைப்பாலம் கட்டும்போது அதைக் கட்டிய தொழிலாளர்களை, ஊர் மக்கள் ஏளனமாகப் பேசி அவமானப்படுத்திவிடுகிறார்கள். அந்தத் தொழிலாளர்கள் விட்ட சாபத்தின் காரணமாக அந்த அணைப்பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடக்க ஆரம்பித்து, அதுவே தொடர்கதையாகிவிடுகிறது.

தங்களின் தவறை மக்கள் உணர்கிறார்கள். அவர்கள் மனம் திருந்தி மன்னிப்புக் கேட்க நினைக்கும்போது, கட்டடத் தொழிலாளர்களின் குடும்பங்கள் இடம் மாறிவிடுகின்றன. பல காலமாக அவர்களின் வாரிசுகளைத் தேடி அலைகிறார்கள் மக்கள். அவர்களில் ஒரு வாரிசுதான் ரஜினி. ரஜினியை அந்த அணைப்பாலத்துக்கு அழைத்துவரும் ஊர் மக்கள், தாங்கள் செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாக அவருக்கு கௌரவம் செய்கிறார்கள். இது ஒரு கதை.

படத்தில் இன்னொரு ரணகள ரஜினியும் உண்டு. அவர் இளமையானவர். 75 சதவிகித வில்லத்தனம் கொண்டவர். கிட்டத்தட்ட 'சந்திரமுகி’ படத்தில் வரும் வேட்டைய மகாராஜாவின் தோற்றம் கொண்டவர். குறுந்தாடி மட்டும் மிஸ்ஸிங். மற்றபடி வேட்டைய மகாராஜாவின் வில்லத்தனத்துக்குக் கொஞ்சமும் குறைவே இல்லாதவர். தப்பு செய்துவிட்டுத் தப்பிவரும் இந்த வில்லன் ரஜினி, போலீஸ் கண்களில் இருந்து மறைந்து வாழ்வதற்காக அணைப்பாலம் பக்கமாக வருகிறார். அங்கே தனக்கு முன் மறைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வழிப்பறிக் கும்பலைக் கண்டுபிடிக்கிறார்.

வில்லன் லிங்கா பராக்... பராக்..! வேட்டை ஆரம்பம்

அந்த வழிப்பறிக் கும்பல், அணைப்பாலத்தில் காரில் செல்பவர்களை அச்சுறுத்தி வழிப்பறி செய்வதையும், எதிர்ப்பவர்களைப் படுகொலை செய்வதையும் கண்டுபிடிக்கிறார். வயதான ரஜினியால் கவரப்படும் இளைய ரஜினி, வில்லத்தனத்தைக் கைவிட்டு, வழிப்பறிக் கும்பலிடம் மோதுகிறார். உண்மையில் சாபம் இருக்கிறதா, வழிப்பறிக் கும்பல் ஒழிந்ததா என்பதைப் பரபரக்கச் சொல்லி இருக்கிறார்களாம்.

படத்தில் மூத்த ரஜினிக்கு சோனக்ஷி சின்ஹாவும், இளைய ரஜினிக்கு அனுஷ்காவும் ஜோடியாக நடிக்க இருக்கிறார்களாம். இளைய ரஜினியுடன் காமெடியான நண்பன் கேரக்டர் ஒன்று கூடவே வரும். 'தெனாலிராமன்’ மூலமாக வடிவேலு மீண்டும் நடிக்க வந்திருப்பதால், அந்தக் கேரக்டருக்கு அவரை நடிக்கவைக்க பேசிக்கொண்டிருக்கிறார்கள். இளைய ரஜினியின் இன்னொரு ரணகள நண்பனாக 'நான் ஈ’ வில்லன் சுதீப் நடிக்கிறார். வில்லனாக ஜெகபதி பாபு நடிக்க இருக்கிறார்.

சுமார் 200 கோடி செலவில் தயாராகும் 'லிங்கா’, இந்த வருடக் கடைசியில் திரையைத் தொடலாம்!

- எம்.குணா

அடுத்த கட்டுரைக்கு