Published:Updated:

ஜூன் 13ல் முண்டாசுப்பட்டி ரிலீஸ்!

விகடன் விமர்சனக்குழு
ஜூன் 13ல் முண்டாசுப்பட்டி ரிலீஸ்!
ஜூன் 13ல் முண்டாசுப்பட்டி ரிலீஸ்!

நகைச்சுவையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'முண்டாசுப்பட்டி'  திரைப்படம் ஜூன் 13 அன்று வெளிவருகிறது.

குறும்படமாக எடுக்கப்பட்ட பல படங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்று வருகிறது. 'காதலில் சொதப்புவது எப்படி', 'பண்ணையாரும் பத்மினியும்' , 'விழா'  போன்ற படங்கள் முதலில் குறும்படமாக எடுக்கப்பட்டவை.

அந்த வரிசையில் குறும்படமாக எடுக்கப்பட்டு முழுநீளத் திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் 'முண்டாசுப்பட்டி'. அறிமுக இயக்குநர் ராமின் முதல் படம் இது.

ஜூன் 13ல் முண்டாசுப்பட்டி ரிலீஸ்!

'முண்டாசுப்பட்டி' என்பது ஒரு கிராமம். இங்கு 1947 -ல் ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த நிகழ்வுக்குப் பிறகு அந்த கிராமத்தில் உள்ள யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை. மீறி எடுத்துக் கொண்டால் மரணம் நிச்சயம் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் படத்தின் நாயகனான விஷ்ணு, தனது நண்பன் காளியுடன் அந்த கிராமத்துக்கு வருகிறார். புகைப்படக் கலைஞனான அவர் எடுக்கும் புகைப்படத்தால் சில பிரச்சனைகள் ஏற்பட அந்த கிராமத்து மக்கள் இருவரையும் கிராமத்தில் சிறை வைக்கிறார்கள்.

அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடன் கூறியுள்ளனர்.படத்தின் கதை 1980ல் நடப்பதாக சித்தரித்துள்ளனர்.

சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும்,  ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து 'முண்டாசுப்பட்டி' திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படம் ஜூன் 13ல் வெளிவருகிறது.