Published:Updated:

டிடி வீட்டுக் கல்யாணம்!

விகடன் விமர்சனக்குழு
டிடி வீட்டுக் கல்யாணம்!
டிடி வீட்டுக் கல்யாணம்!

விஜய் டிவியில் தற்பொழுது முன்னணித் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்கிற டிடி. விஜய் டிவியின் 'நம்ம வீட்டு கல்யாணம்', 'காஃபி வித் டிடி' போன்ற நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

குறும்புத்தனமான டிடியின் பேச்சுக்காகவே அவரின் நிகழ்ச்சிகளுக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. 'நம்ம வீட்டு கல்யாணம்' நிகழ்ச்சியில் திருமணத் தம்பதிகளிடம் கேள்விகள் கேட்டுவந்த டிடிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

டிடி வீட்டுக் கல்யாணம்!

டிடிக்கும் அவரின் நண்பர் ஸ்ரீகாந்த ரவிச்சந்திரனுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பிரபல வெள்ளித்திரை, சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்ளும் இவர்களின் திருமணம் ஜூன் 28ம் தேதி நடைபெற உள்ளது. இதை திவயதர்ஷினி தன் ட்விட்டர் தளத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஸ்ரீகாந்த்
ஸ்ரீகாந்த்