Published:Updated:

சூர்யா படத்திற்கு வசனம் எழுதும் மதன் கார்க்கி!

Vikatan Correspondent
சூர்யா படத்திற்கு வசனம் எழுதும் மதன் கார்க்கி!
சூர்யா படத்திற்கு வசனம் எழுதும் மதன் கார்க்கி!

'கண்டேன் காதலை' படத்தில் இடம் பெற்ற 'ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன்' பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் மதன் கார்க்கி.

அதன் பிறகு 'எந்திரன்' படத்தில் 'இரும்பிலே ஒரு இருதயம்', 'கோ' படத்தில் என்னமோ ஏதோ எனத் தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்துவருகிறார்.

'எந்திரன்', 'நண்பன்', 'இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'திருமணம் எனும் நிக்காஹ்' ஆகிய படங்களில் வசனமும் எழுதினார். தெலுங்கில் ராஜமௌலி இயக்கிவரும் 'பகுபாலி' படத்தின் தமிழ் பதிப்பான 'மகாபலி' படத்திற்கும் வசனம் எழுதுகிறார்.

தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் வெங்கட்பிரபுவுடன் இணைந்து வசனம் எழுதவுள்ளார் மதன் கார்க்கி.

இதுகுறித்து "வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் வசனம் எழுத இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன் வெங்கட்பிரபு இயக்கிய 'பிரியாணி' படத்தில் மதன் கார்க்கி பாடல் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.