Published:Updated:

தனுஷைப் பாராட்டிய சிம்பு!

தனுஷைப் பாராட்டிய சிம்பு!
தனுஷைப் பாராட்டிய சிம்பு!

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. இப்படத்தை தயாரித்து நடிக்கிறார் தனுஷ். இது தனுஷின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அமலாபால் ஹீரோயினாக நடிக்கிறார்.

சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்னன் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் நேற்று இரவு வெளியானது. வெளியான 12 மணிநேரத்தில் 79 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர்.

தனுஷைப் பாராட்டிய சிம்பு!

இப்படத்தின் டிரெய்லரைப் பார்த்த சிம்பு, 'டிரெய்லர் அருமையாக இருக்கிறது. ஆல் தி பெஸ்ட்' என ட்விட்டரில் தனுஷைப் பாராட்டி இருக்கிறார்.

ஜூலை மாதம் இப்படம் திரைக்குவர உள்ளது. இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் மூலம் பி.மதன் வெளியிடுகிறார்.