Published:Updated:

13 லட்சம் ரசிகர்கள் விரும்பும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

13 லட்சம் ரசிகர்கள் விரும்பும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!
13 லட்சம் ரசிகர்கள் விரும்பும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

ஏறக்குறைய எல்லா பிரபலங்களும் இப்போது சமூக வலைதளங்களில் தனக்கான அதிகாரப் பூர்வ பக்கங்களைத் தொடங்கி அதன் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பது வழக்கமாகிவிட்டது.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ட்விட்டரில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சமூக வலைதளத்தில் இணைந்தது பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

13 லட்சம் ரசிகர்கள் விரும்பும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தனக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தை தொடங்கியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தொடங்கிய ஒரே மாதத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

மேலும், அவர் தனது வீடியோ ஒன்றையும் பதிவேற்றியுள்ளார். அதில் "ஃபேஸ்புக்கில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதன் முலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பேன், உங்கள் ஆதரவிற்கு நன்றி!" எனத் தெரிவித்துள்ளார்.