Published:Updated:

சூர்யா, ஆர்யா, சசிக்குமாரிடம் பாராட்டு பெற்ற 'இது நம்ம ஆளு'

சூர்யா, ஆர்யா, சசிக்குமாரிடம் பாராட்டு பெற்ற 'இது நம்ம ஆளு'
சூர்யா, ஆர்யா, சசிக்குமாரிடம் பாராட்டு பெற்ற 'இது நம்ம ஆளு'

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திற்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கும் படம் 'இது நம்ம ஆளு'. இப்படத்தின் மூலம் வெகுநாட்களுக்குப் பிறகு சிம்பு, நயன்தாரா மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

இப்படத்தின் டிரெய்லர் இன்னும் வெளியாகாத நிலையில் சமீபத்தில் சூர்யா, ஆர்யா, சசிக்குமார், சந்தானம், மற்றும் சுசீந்திரன் ஆகியோருக்கு படத்தின் டிரெய்லர் வீடியோவை காண்பித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்.



டிரெய்லரைப் பார்த்தவர்கள் பாண்டிராஜை வெகுவாக பாராட்டியுள்ளனர். மேலும் படத்தின் டிரெய்லரைப் பார்த்த நயன்தாரா தனக்கு ஒரு நல்ல படம் அளித்ததற்காக பாண்டிராஜிடம் நன்றி கூறியுள்ளார்.

படத்தில் நயன்தாராவிற்கு 'மைலா' என வித்தியாசமாக பெயரிடப்பட்டுள்ளது. சிம்புவின் பெயர் சிவா என இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.

சிம்புவின் தம்பி குரளரசன்  இசையமைக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.