Published:Updated:

ஆன்மீகம் எனக்கு ஆனந்தத்தை அள்ளித்தருகிறது! - ஆன்மீகத்தில் சிம்பு

 ஆன்மீகம் எனக்கு ஆனந்தத்தை அள்ளித்தருகிறது! - ஆன்மீகத்தில் சிம்பு
ஆன்மீகம் எனக்கு ஆனந்தத்தை அள்ளித்தருகிறது! - ஆன்மீகத்தில் சிம்பு

ழக்கமாக ஆட்டத்தில்தான் அதிரடி கிளப்புவது சிம்புவின் பழக்கம் இப்போது ஆன்மிகத்தில் அதிரடியான விஷயங்களை பேசி நம்மை அசரவைக்கிறார் சிம்பு. நயன்தாரா, ஹன்சிகா என்று காதல் சிற்றின்பத்தில் சுற்றித்திரிந்தவர். இப்போது கடவுள் பேரின்பத்தை கதைக்கிறார். இன்னும் கல்யாணம் ஆகவில்லை, குழந்தை பெறவில்லை அதற்குள் ஒஷோ, ராம்சுரத்குமார், ஜக்கி வாசுதேவ் ரேஞ்சுக்கு தத்துவங்களை அள்ளிவிடுகிறார், சிம்பானந்தா சுவாமிகள்.

உங்கள் முன்னோடியாக ரஜினி, அஜித்தை எப்படி செலக்ட் செய்தீர்கள்?

ரஜினிசார் இன்னிக்கு உச்ச நட்சத்திரமா உசரத்துல உட்கார்ந்து ஜொலிக்கிற விஷயம்தான் நம்ம கண்ணுக்கு தெரியும். ஆரம்ப காலத்துல கஷ்டப்பட்ட விஷயங்களை நான் கேள்விப்பட்டும், படிச்சும் மிரண்டு போயிருக்கேன். காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்னு சொல்வாங்க அதுபோல அப்போ கல்லெறிஞ்ச அத்தனை பேரும் இப்போ ஆகாச உயரத்துல இருக்குற ரஜினிசாரை எல்லோரும் கைகட்டி அண்ணாந்து வேடிக்கை பார்க்குறாங்க.

 ஆன்மீகம் எனக்கு ஆனந்தத்தை அள்ளித்தருகிறது! - ஆன்மீகத்தில் சிம்பு

ரஜினிசார் மாதிரியே எந்தவித பின்புலமும் இல்லாம சுயபலத்தோடு சுயம்புவா வந்தவர்தான் அஜித்சார். தன்னம்ப்பிக்கையை மட்டுமே துணையா கொண்டு இன்னிக்கு சினிமாவுல முன்னணியில் இருக்குற அஜித்சாரை பார்த்து பலமுறை பிரமிச்சு போயிருக்கேன். ‘நான் தொடர்ந்து தோல்வி படங்கள் கொடுத்த மாதிரி வேறுஎந்த ஹீரோக்களாவது ப்ளாப் படங்களை கொடுத்திருந்தா இந்நேரம் கோடம்பாக்கத்தைவிட்டு அட்ரஸே இல்லாம காணாம போயிருப்பாங்க...’ என்று அடிக்கடிச் சொல்வார் உண்மையிலேயே அது அப்பட்டமான உண்மை அப்படி ஒப்பனா பேசுறதுக்க்கு ஒரு தைரியம் வேணும், வாழ்க்கையில ‘எல்லாம் கடந்து போகும்’ என்று ஒஷோ சொன்ன மாதிரி இப்போ எல்லாத்தையும் தாண்டி இன்னிக்கு தனித்துவமா தனியா ‘தல’யா நிக்கிறார்.

முதலில் சந்தானம் அடுத்து விடிவி கணேஷ் என்று எப்படி அடையாளம் கண்டுபிடித்து அறிமுகம் செய்தீர்கள்?

ஜெயிக்க போராடும்போது மத்தவங்க அவங்களை காயப்படுத்தும் போதும் அவர்கள் மனசு என்ன பாடுபடும் என்பதை நான் உணர்வேன். முதல்ல சந்தானம், விடிவி கணேஷ் ரெண்டு பேரும் என்க்கு நல்ல நண்பர்கள். நல்லா நெருங்கி பழகும்போது சந்தானத்திடம் இருந்த நகைச்சுவை திறமை, உழைப்பை கண்டுபிடிச்சு ‘மன்மதன்’ படத்தில் அறிமுகம் செய்தேன். அப்போ பிற்காலத்துல பெரிசா வருவார் அவரோட திறமை வெளிச்சத்துக்கு வரும்னு  நம்பினேன். அது வீணா போகலை. இப்போ கண்கூடா  பார்க்கிறேன். எனக்கு சந்தோஷமா இருக்கு.


அப்பாவோட பிரபலம் என்கிற பின்புலம் இருக்குற எனக்கே இந்த நிலைமைன்னா திறமை நிறைய இருந்தும் சாதாரணமா சாமான்ய நிலையில் இருந்து சினிமாவுக்கு வந்து நடிக்க வர்றவங்க நிலைமை எப்படி இருக்கும்?

நான் ‘காதல் ஓய்வதில்லை’ படத்தில் நடிக்க வர்றதுக்கு முன்னாடி ஐ.டி.ஐ.&யில் ஒரு பங்ஷன்ல கலந்துக்க போனேன் என் திறமையை மேடையில் காட்ட முயன்றேன் அப்போது அங்கே இருந்தவர்கள் என்னை இன்சல்ட் செய்தார்கள். இத்தனைக்கும் நான் நாடறிஞ்ச டைரக்டர் டி.ராஜேந்தர் மகன் சிம்பு. ஆறு வயசுலே இருந்தே சிம்புவை தமிழ்நாட்ல இருக்குற எல்லாரும் நல்லாவே தெரியும். எனக்கு கார், பங்களானு ஏகப்பட்ட வசதி இருக்கு அப்படிப்பட்ட என்னையே சுலபமா கேவலமா அவமானம் செய்தாங்க. டி.ராஜேந்தர் மகன் என்கிற இன்புளுயன்ஸ யூஸ்பண்ணி டான்ஸ்ஆட ஒரு வாய்ப்பு கேட்டேன். அதைக்கூட அவர்களாலே தரலை. என்னை ஏனோ அங்கீகரிக்க விரும்பலை அப்போ என்மனசுல ஏற்பட்டவலி  இப்பவும் ரணமா இருக்கு.

சமூகம்பற்றி உங்களது பார்வை எப்படி?

ஒவ்வொரு மனுஷனும் ஒரு வேளை சோத்துக்கு கஷ்டப்படுறான் இதுதான் உண்மை. ஒருத்தன் இன்னொருத்தனுக்கு உதவுற மனப்பான்மை ஒரு காலத்துல இருந்துச்சு இப்போ சத்தியமா சாத்தியம் இல்லை. அப்போ கூட்டுக் குடும்பத்துல அண்ணன் தம்பி எல்லாம் ஒண்ணா சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாங்க. இப்போ தனிக்குடித்தனமா ஒரேவீட்டுல புருஷன், பொண்டாட்டி என்ற உறவுக்குள்ளேயே ஈகோ எட்டிப்பார்க்குது. முதல்ல சின்னதா ஸ்டார்ட்ஆகி அப்புறம் பெரிசா டெவல ஆகி டைவர்ஸ் கேட்டு குடும்ப கோர்டுல போய் நிக்குது. அப்போ அப்பா, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு உறவுக்காரங்க அம்மா, அப்பாவா இருந்தாங்க. இப்போ நடக்குற விவாகரத்தால அப்பா, அம்மா உயிரோட இருக்கும் போதே அவங்க கண் முன்னாடியே அவங்க பெற்ற குழந்தைகள் அனாதையாக நிக்கிறாங்க.

திடீரென பக்தி பழமாக சிம்பு சிம்பானந்தா சுவாமிகளாக ஆன்மிக அவதாரம் எடுத்து இருப்பது ஏன்?

என்னை படைத்தவன் இறைவன் நான் எதுவாக இருக்க வேண்டும் இயங்க வேண்டும் என்று முடிவு செய்பவனும் அவனே. ஒரு மனிதனுக்கு லாட்டரிச் சீட்டில் பம்பர் குலுக்கலில் பணம் கிடைத்தால் மனம் எப்படி குதுகலத்தில் குஷியாக குதிக்குமோ அதைவிட அதிகமான ஆனந்தத்தை ஆன்மிக எனக்கு அள்ளித்தருகிறது. பக்தி ஞானம் தோன்றும் போதும் கடவுள் நம்பிக்கை ஏற்படும் போதும் பேரானந்தம் ஏற்படுகிறது.கடவுளுக்கு பிடித்த விஷயங்களை நான் செய்தால் இறைவன் மகிழ்ந்து போய் எனக்கு நல்லவைகளை தருகிறான். கடவுளுக்கு பிடிக்காத செயலை நான் செய்தால் எனக்கு மனக்காயத்தை உண்டாக்குகிறான். நமது வாழ்க்கையில் சுகம், சோகம் இரண்டையும் நிர்ணயிப்பவன் கடவுள். எனக்கு இப்போது முப்பது வயதில், ஐம்பது வயதுக்குரிய அனுபவ அறிவுவை கொடுத்து இறைவன்தான் என்பதை மனதார உணர்கிறேன்.

 ஆன்மீகம் எனக்கு ஆனந்தத்தை அள்ளித்தருகிறது! - ஆன்மீகத்தில் சிம்பு

- எம்.குணா

பின் செல்ல