Published:Updated:

கொரியன் படத்தின் காப்பியா ஜிகர்தண்டா?

கொரியன் படத்தின் காப்பியா ஜிகர்தண்டா?
கொரியன் படத்தின் காப்பியா ஜிகர்தண்டா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் 'ஜிகர்தண்டா'. இப்படம் சில வாரங்களுக்கு முன்பு தணிக்கைத் துறையால் யு/ஏ சான்றிதழ் பெற்றது.

ஆனால், யு/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படத்திற்கு வரிச்சலுகை கிடைக்காது, மேலும் இது தொலைக்காட்சி உரிமை விற்பனையிலும் சில சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கொரியன் படத்தின் காப்பியா ஜிகர்தண்டா?

அதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் 'யு' சான்றிதழ் பெற ஏதுவாக சில காட்சிகளை நீக்கி தர சொல்லி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் தெரிவித்தாராம். ஆனால், அந்த காட்சிகளுக்கு கத்தரி போட விரும்பாத கார்த்திக் சுப்புராஜ் மறுத்துள்ளார்.

இந்த தருணத்தில் ய டர்ட்டி கார்னிவல்' என்ற கொரிய சினிமாவின் தழுவல்தான் 'ஜிகர்தண்டா' என்று சொல்லப்பட்டது. இது குறித்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

"ஜிகர்தண்டா முழுக்க முழுக்க ஒரிஜினல் படம். ரவுடியிச பின்னணி கொண்ட எத்தனையோ படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ரசித்திருக்கிறோம். அந்தப் பின்னணியில் ரசிகர்களுக்கு தனி புதியதொரு விருந்து தருவதற்காகவே உருவாக்கப்பட்ட கதையும் களமும்தான் 'ஜிகர்தண்டா'.

'பீட்சா'வை விட பல மடங்கு சுவைமிக்கதாய் இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கும் 'ஜிகர்தண்டா', ரசிகர்களை ஜில்லிடவைக்கும் என்பது உறுதி.

ஒரு படத்தைத் தழுவி எடுக்க வேண்டிய அளவுக்கு சிந்தனை வறட்சிக்கு ஆளாகவில்லை என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன். முதல் நாள் முதல் ஷோவில் இதை நீங்களும் ரசிகர்களும் உணர்வது நிச்சயம்" என்றார்.