Published:Updated:

ஜெயம் ரவி படத்தில் ஆர்யா!

ஜெயம் ரவி படத்தில் ஆர்யா!
ஜெயம் ரவி படத்தில் ஆர்யா!

'ஜெயம்' ரவி, ஹன்சிகா நடிக்கும் 'ரோமியோ ஜூலியட்' படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

'சிவா மனசுல சக்தி' படத்தில் ஜீவாவுடனும், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் உதயநிதியுடனும் கெஸ்ட் ரோலில் நடித்தார் ஆர்யா.

தற்போது 'மீகாமன்', 'புறம்போக்கு','யட்சன்' ஆகிய படங்களில் பிஸியாக இருந்தாலும், மூன்று படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

பார்த்திபன் இயக்கும் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்திலும், சுசீந்திரன் இயக்கும் 'ஜீவா மேன் ஆஃப் தி மேட்ச்' படத்திலும், லக்ஷ்மண் இயக்கும் 'ரோமியோ ஜூலியட்' படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

'ரோமியோ ஜூலியட்' படத்தில் 'ஜெயம்' ரவி ஃபிட்னஸ் ட்ரெய்னராக நடிக்கிறார். அவரிடம் ஆலோசனை பெறும் சின்ன கேரக்டரில் ஆர்யா நடிக்கிறார்.