Published:Updated:

அஜித் - கௌதம் மேனன் படத்தின் வில்லன்!

Vikatan Correspondent
அஜித் - கௌதம் மேனன் படத்தின் வில்லன்!
அஜித் - கௌதம் மேனன் படத்தின் வில்லன்!

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இதில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்காவும், த்ரிஷாவும் நடிக்கின்றனர். அனுஷ்கா முதன் முறையாக இதில் சொந்தக் குரலில் பேச இருக்கிறார்.

அஜித் - கௌதம் மேனன் படத்தின் வில்லன்!

அருண்விஜய், தன்ஷிகா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ராஜசிம்மன் என்ற நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறார். இவர் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்த 'குட்டிப்புலி' படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் மாதத்தில் அஜித் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும். ஆனால், நவம்பர் மாதத்தில்தான் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.