Published:Updated:

ஷங்கர் படத்தில் ரஹ்மானுக்காகப் பாடிய அனிருத்!

ஷங்கர் படத்தில் ரஹ்மானுக்காகப் பாடிய  அனிருத்!
ஷங்கர் படத்தில் ரஹ்மானுக்காகப் பாடிய அனிருத்!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் படம் 'ஐ'. இப்படத்தை இந்தியத் திரையுலகே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.

ஷங்கர் படத்தில் ரஹ்மானுக்காகப் பாடிய  அனிருத்!

இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை அனிருத் பாடியுள்ளார். ஏ.ஆர், ரஹ்மான்தான் அனிருத்தைப் பாட அழைப்பு விடுத்தாராம்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் " 'ஐ' படத்தில் பாடல் பாடியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இயக்குநர் ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மனுக்கு நன்றி!" என அனிருத் கூறியுள்ளார்.

இதற்குமுன், தமன், டி.இமான் போன்ற இசையமைப்பாளர்கள் இசையில் அனிருத் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.