Published:Updated:

தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சிங்களப் படம்!

தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சிங்களப் படம்!
தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சிங்களப் படம்!

தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சிங்களப் படம்!

தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சிங்களப் படம்!

பிரசன்ன விதானகே... சிங்கள சினிமாவின் மிக முக்கிய இயக்குநர். பிறப்பால் சிங்களராக இருந்தாலும் தொடர்ச்சியாக சிங்களப் பேரினவாதத்தையும் ராணுவத்தையும் விமர்சித்துப் படமெடுப்பவர் என்பதால், ஈழத் தமிழர்களிடையேயும் அவர் மீது மரியாதை உண்டு. அவரின் சமீபத்திய சினிமாவான 'ஒப நதுவ ஒப எக்க’ (ஆங்கிலத்தில் 'வித் யூ வித் அவுட் யூ’, தமிழில் 'பிறகு’) கடந்த வார இணையத்தில் விவாதப் பொருளாகிவிட்டது.

போருக்குப் பிந்தைய சூழலில் வெளியாகும் இந்த சினிமா வெளிப்பார்வைக்கு, காதல் சினிமாதான். ஆனால் நேரடியாக எந்தக் காட்சிகளையும் வைக்காமல் போரின் தாக்கத்தையும் இரு இனங்களுக்கு இடையேயான வெவ்வேறுவிதமான மனநிலைகளையும் நமக்குக் கடத்துகிறது.

தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சிங்களப் படம்!

கதை மிக எளிதானது. செல்வி என்ற தமிழ்ப் பெண்ணைக் காதலித்துக் கரம் பிடிக்கிறான் சிங்கள இனத்தைச் சேர்ந்த சரத் ஸ்ரீ. அடகுத்தொழில் செய்யும் அவன் எப்போதும் இறுக்கமாகவே இருக்கிறான். டி.வி-யில் மல்யுத்தப் போட்டியைத் தவிர, வேறு எதையும் பார்ப்பது இல்லை. இருவருக்கும் திருமணமாகி சில நாட்கள் கழித்து, சரத்தின் பழைய நண்பன் ஒருவன் அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு வருகிறான். அவன் மூலம்தான் தன் கணவன் ஒரு முன்னாள் சிங்கள ராணுவ வீரன் என்ற விஷயம் செல்விக்குத் தெரியவருகிறது. இதனால் அவர்கள் உறவில் விரிசல் ஏற்படுகிறது. தன் குடும்பம் அழிவதற்குக் காரணமான சிங்கள ராணுவத்தைச் சேர்ந்தவன்தான் தன் கணவன் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மனைவியின் விலகல், கொஞ்சம் கொஞ்சமாக அவனை நெகிழ்த்துகிறது. தனது கடந்தகால

தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சிங்களப் படம்!

வாழ்க்கைக்காக வருந்தும் அவன் மனைவியிடம் உண்மையைப் பகிர்ந்துகொள்ள முடிவுசெய்கிறான். தன் ராணுவ நண்பர்கள் தமிழ்ப்பெண் ஒருத்தியைப் பாலியல் பலாத்காரம் செய்ததையும் அவர்களைக் காப்பாற்றுவதற்காக தான் பிறழ் சாட்சி சொன்னதையும் சொல்லி அவளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறான். கழிவிரக்கத்தால் உண்டான காதலை அவளால் அந்தக் கணத்திலிருந்து ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவனை நேசிப்பதையும் அவளால் தவிர்க்க முடியவில்லை. மனைவியின் மகிழ்ச்சிக்காக இந்தியா செல்ல முடிவெடுக்கிறான் நாயகன். அவர்கள் இந்தியா வந்து சேர்ந்தார்களா? முடிவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்.

அழகியலோடு கூடிய சினிமா என்பதாலும் ஒரு முக்கிய பிரச்னையைப் பின்னணியாகப் பேசி இருந்ததாலும் படம் உலகக் கவனம் பெற்றது. விதானகேவின் மூன்றாவது படம் இது. கத்தி மேல் நடப்பதைப்போல் கவனமாகக் கையாண்டிருக்கிறார். பி.வி.ஆர் சினிமாஸ் நாடெங்கிலும் இருக்கும் தங்கள் திரையரங்குகளில் கடந்த 20-லிருந்து 26-ம் தேதி வரை திரையிட்டது. ஆனால், சென்னையில், பி.வி.ஆர் தியேட்டருக்கு மிரட்டல் என்ற செய்தி கிளம்பியதால், காட்சி ரத்தானது. தமிழ் ஸ்டுடியோ அருண் என்பவர் இந்தப் படத்தைத் திரையிட்டார். படத்தின் இயக்குநர் விதானகேவும் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்ததோடு, படம் முடிந்த பிறகு பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு சிங்களப் படம்!

தமிழ், சிங்கள மொழி நடையோடு வந்திருக்கும் இந்தப் படத்தின் எடிட்டர் நம் ஸ்ரீகர் பிரசாத். படத்தின் பாத்திரத் தேர்வும் லொகேஷனும் கேமரா உள்ளிட்ட விஷயங்களும் உலகத் தரத்தில் இருந்ததைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒரு சிங்களவராக இருந்தபோதிலும் சிங்கள ராணுவம் தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபடுவதைத் தைரியமாகப் பதிவு செய்திருப்பதோடு சிங்களர்கள் குற்றவுணர்வு கொள்ள வேண்டிய அவசியத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்த வகையில் முக்கியமான அரசியல் படம், 'பிறகு’!

- ஆர்.சரண்

அடுத்த கட்டுரைக்கு