Published:Updated:

ஸ்டாலினைப் பிடிச்சிருக்கு... தி.மு.க - வில் சேரணும்!

ஸ்டாலினைப் பிடிச்சிருக்கு... தி.மு.க - வில் சேரணும்!
ஸ்டாலினைப் பிடிச்சிருக்கு... தி.மு.க - வில் சேரணும்!

ஸ்டாலினைப் பிடிச்சிருக்கு... தி.மு.க - வில் சேரணும்!

பாபிலோனா என்ற கவர்ச்சி நடிகையை ஞாபகம் இருக்கிறதா? (அது சரி, அவ்வளவு சீக்கிரம் மறந்துடவா போறீங்க?) கவர்ச்சி நடனம் ஆட மும்பையில் இருந்து சன்னிலியோனை இறக்குமதி செய்யும் காலத்தில் என்ன செய்கிறார் பாபிலோனா என்று தேடிப் பிடித்துப் பேசினேன். (கடமை... கடமை!)

ஸ்டாலினைப் பிடிச்சிருக்கு... தி.மு.க - வில் சேரணும்!

 

''நான் பரதநாட்டிய கிளாஸுக்குப் போயிட்டு இருந்த சமயத்துலதான் சினிமா வாய்ப்பு வந்தது. ஒரு மலையாளப் படத்தில் கிளாமர் பாட்டுக்கு ஆடச் சொன்னாங்க. ரொம்ப சின்னப்பொண்ணா இருந்ததினால, கிடைக்கிற சான்ஸை மிஸ் பண்ணக் கூடாதுனு சம்மதிச்சேன். எங்க பாட்டிதான், 'எல்லா நடிகைகளுமே கிளாமர் பண்ணிட முடியாது. அதெல்லாம் கடவுள் கொடுக்கிற வரம். அது உனக்குக் கிடைச்சிருக்கு’னு சொன்னாங்க. என் ஒரிஜினல் பெயர் பாக்கியலட்சுமி. ஸ்கூல் படிக்கிறப்போ முரளி சாரோட 'பாபிலோனா...’ பாட்டை டியூஷனுக்குக்கூட போகாமக் கேட்டுக்கிட்டே இருப்பேன். 'பாபிலோனா’ங்கிற பெயரை உச்சரிக்கும்போதே கிளாமரும் கிக்கும் ஆட்டோமேட்டிக்கா வருதுல்ல? அதனால அதையே வெச்சுக்கிட்டேன். ஆனா, எனக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகணும்கிற ஆசைதான் இருந்தது. சில காரணங்களால் அது முடியலை'' - அதிரடியாகவே ஆரம்பித்தார் பாபி.

''கொஞ்ச நாள் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு, அடுத்து 'ராகுலைப் பிடிச்சிருக்கு’னு காங்கிரஸ்ல சேர்ந்தீங்க. இப்போ எந்தக் கட்சியில் இருக்கீங்க?''

''இப்போ எனக்கு தி.மு.க-வை ரொம்பப் பிடிச்சிருக்கு. முக்கியமா ஸ்டாலின். அவர் 'குறிஞ்சி மலர்’ சீரியல்ல நடிச்சப்பவே ரொம்ப ரசிச்சுப் பார்த்திருக்கேன். அப்புறம், அவர் கட்சியில் தீவிரம் காட்ட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இன்னும் ரொம்பப் பிடிக்க ஆரம்பிச் சிருச்சு. கட்சியில் அவருடைய வேகம் இருக்கே... சான்ஸே இல்லை.

பொதுவா எல்லா நடிகைக்கும் அஜித், விஜய்கூட நடிக்கணும்னு கனவு இருக்கும். ஆனா, எனக்கு  தி.மு.க-வுல சேரணும்கிறதுதான் கனவு. கட்சியில் எனக்குக் கிடைக்கிற பதவிகள்கூட அடுத்த விஷயம்தான். இத்தனைக்கும் நான் ஸ்டாலினை நேர்ல பார்த்தது இல்லை. நடந்து முடிஞ்ச எலெக்ஷன்ல அவருடைய பேச்சுகளையெல்லாம் யூடியூப்ல தேடித் தேடிப் பார்த்தேன். ஆக்சுவலா எனக்கு இன்னொருத்தர்கிட்ட 'இந்தக் கட்சியில் சேரணும். உதவி பண்ணுங்க’னு கேட்கப் பிடிக்காது. இல்லைனா, எப்பவோ தி.மு.க-வுல சேர்ந்திருப்பேன். என்னோட விருப்பத்தைச் சொல்றதுக்கு இப்போ ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. எனக்கு வாய்ப்பு கிடைச்சா தி.மு.க-வுல சேர்வேன்.''

''அப்போ ஜெயலலிதாவையும் ராகுல் காந்தியையும் பிடிக்காமப்போகக் காரணம்?''

ஸ்டாலினைப் பிடிச்சிருக்கு... தி.மு.க - வில் சேரணும்!

''ஏதாவது ஒரு புதுக் கடைக்குப் போனீங்கனா, 'ஒண்ணு வாங்கினா ஒண்ணு இலவசம்’னு ஆஃபர் கொடுப்பாங்க. அ.தி.மு.க-வில் இதுதான் நடக்குது. அம்மா உணவகம், அம்மா உப்பு... இதெல்லாம் மக்களுக்குத் தேவைதான். ஆனா, அதைவிட மக்களுடைய குறைகள் எக்கச்சக்கமா இருக்கே? நல்ல ஸ்கூல் கட்டலாம், மக்களுக்கு வரிச் சலுகை கொடுக்கலாம். ஒரு முதல்வருக்கு மக்களோட அடிப்படைத் தேவைகளைத் தீர்த்துவைக்கிறதுதான் அழகே தவிர, இலவசங்களைக் கொடுக்கிறது அல்ல. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்த அ.தி.மு.க வேற. இப்போ 'இலவசமே’ கட்சினு ஆகிடுச்சு. ராகுலைப் பற்றி ஒரு வரியில் சொல்லணும்னா, 'ஆள்தான் வெள்ளை; மத்ததெல்லாம் தொல்லை’. ''

''பொதுவாகக் கவர்ச்சி நடிகைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இணை பிரியாத உறவு இருக்கே? அதுக்குக் காரணம் என்ன?''

''ஆடம்பரமா வாழணும்னு ஆசைப்படுறதுதான். 'நடிக்கிறதோட சரி’னு இருக்காம, அதிகமா பணம் சம்பாதிக்கணும்கிற குறிக்கோள் வரும்போதுதான், தப்பான விஷயங்கள் பண்ணணும்கிற எண்ணம் அவங்களுக்கு வந்துடுது. குடும்பத்தில் இருக்கிறவங்களும் ஆதரவா இல்லாம, 'நாங்க நல்லா இருக்கணும்னா இதெல்லாம் பண்ணு’னு சொல்லியிருப்பாங்க. குறிப்பிட்ட சில கவர்ச்சி நடிகைகளால, கிளாமரை நடிப்போட நிறுத்திக்கிற என்னை மாதிரி நடிகைகளையும் அது பாதிக்குது.''

''ஷூட்டிங் ஸ்பாட்ல கவர்ச்சி நடிகைகளை எப்படி நடத்துறாங்க?''

''வளர்ற நிலையில் இருக்கிற நடிகைனா தயாரிப்பாளர்ல இருந்து, லைட்மேன் வரைக்கும் ரொம்பக் கேவலமாதான் நடத்துவாங்க. ஆனா, என்னோட ஃபேமிலிக்கும் சினிமாவுக்கும் ரொம்ப காலத் தொடர்பு இருக்கிறதனால, எனக்கான மரியாதை தனி. தவிர, நான் அரட்டை அடிக்கிறது, பார்ட்டிக்குப் போய் ஆடுறதுனு மற்ற நடிகைகள் மாதிரி இருக்க மாட்டேன்.  பீர் அடிக்கிற பழக்கம்கூட எனக்குக் கிடையாது. ரசிகர்களும் என்னைப் பார்க்கும்போது தப்பான பார்வை பார்க்கிறதோ, தப்பா பேச முயற்சிக்கிறதோனு இல்லாம, ஜாலியா போட்டோ எடுத் துப்பாங்க. ஆட்டோகிராஃப் வாங்கிக்குவாங்க.''

- கே.ஜி.மணிகண்டன்

அடுத்த கட்டுரைக்கு