Published:Updated:

ரம்ஜானுக்கு சலீம், மெட்ராஸ் உள்ளிட்ட ஏழு படங்கள் ரிலீஸ் !

விகடன் விமர்சனக்குழு
 ரம்ஜானுக்கு சலீம், மெட்ராஸ் உள்ளிட்ட ஏழு படங்கள் ரிலீஸ் !
ரம்ஜானுக்கு சலீம், மெட்ராஸ் உள்ளிட்ட ஏழு படங்கள் ரிலீஸ் !

ரம்ஜான் பண்டிகையன்று சலீம், மெட்ராஸ், சதுரங்க வேட்டை உள்ளிட்ட மூன்று படங்கள் தமிழில் வெளியாக உள்ளன.

மேலும் இந்த மூன்று படங்கள் தவிர இந்தியில் சல்மான்கான், ஜாகுலின் ஃபெர்னாண்டஸ் நடித்து 'கிக்' படமும் வெளியாக உள்ளது.

அதேபோல் ஹாலிவுட்டிலும் இதே நாளில் மூன்று படங்கள் வெளியாக உள்ளன. இதில் உலக சினிமா ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் 'ஹெர்குல்ஸ்' படமும் அடங்கும்.

ஹாலிவுட்டில் 'ஹெர்குல்ஸ்', 'லூஸி', மற்றும் ' மேஜிக் இன் தி மூன் லைட்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

'ஹெர்குல்ஸ்' திரைப்படம் டுவெய்னி ஜான்சன் நடித்து பாரமௌண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட வெளியீடாக வெளியாக இருப்பதால் கடும் போட்டிகள் நிலவ வாய்ப்புள்ளது.

மேலும் தமிழில் ஏற்கனவே விஜய் ஆண்டனி தயாரிப்பில் 'நான்' வெற்றியடைந்ததை ஒட்டி 'சலீம்' படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

கார்த்தியின் வித்தியாச நடிப்பு எனவும் , மேலும் இப்படத்தின் பாடல்கள் ,மற்றும் டிரெய்லருக்கு கிடைத்த வரவேற்பால் 'மெட்ராஸ்' படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.