Published:Updated:

என் ஞானகுருவை என் வீட்டுக்குள் அழைத்து வந்தவர் மணிரத்னம்! - கே.பாலசந்தர்

என் ஞானகுருவை என் வீட்டுக்குள் அழைத்து வந்தவர் மணிரத்னம்! - கே.பாலசந்தர்

என் ஞானகுருவை என் வீட்டுக்குள் அழைத்து வந்தவர் மணிரத்னம்! - கே.பாலசந்தர்

என் ஞானகுருவை என் வீட்டுக்குள் அழைத்து வந்தவர் மணிரத்னம்! - கே.பாலசந்தர்

என் ஞானகுருவை என் வீட்டுக்குள் அழைத்து வந்தவர் மணிரத்னம்! - கே.பாலசந்தர்

Published:Updated:
என் ஞானகுருவை என் வீட்டுக்குள் அழைத்து வந்தவர் மணிரத்னம்! - கே.பாலசந்தர்

பூப்பூத்த நந்தவனத்துக்குள் நுழைந்ததுபோல ஆனந்தமாக இருந்தது, டைரக்டர் கே.பாலசந்தர் வீட்டு மாடியில் அடியெடுத்து வைத்தபோது! சுவரை மறைத்துக்கொண்டு நாலாத்திசையிலும் உயர்ந்து நின்ற கண்ணாடி ஷோகேஸ்கள் நிறைய கேடயங்கள், பதக்கங்கள், விருதுகள், பரிசுகள்... ஜனாதிபதிகள் மற்றும் காமரா ஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். என்று பல தலைமுறை முதல்வர்களிடம் பாலசந்தர் பரிசு பெறும் புகைப்படங்கள்...

"டின்னருக்கு நீங்கள் அழைக்கும் வி.ஐ.பி. யார்...?"

"சத்யஜித்ரேயைத்தான் அழைக்கவேண்டும். என் மானசீக ஆசான் அவர். துரோணரும் ஏகலைவனும்போல எங்களுக்குள் ஓர் ஆத்மார்த்தமான பிணைப்பு. சமூக நோக்குடனான அவர் படங்கள் எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தின. ஒரு வகையில், அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்! ஒரே ஒருமுறை அவரை, அவரது ஸ்டூடியோவில் சந்தித்திருக்கிறேன். அவரை என் வீட்டுக்கு அழைத்து வந்து விருந்தளித்து, அவரோடு அமர்ந்து சாப்பிட்டு, நிறையப் பேசி... இப்படி எனக்குள் நிறைய ஆசை! ஆனால்... அதற்கு எனக்குக் கொடுத்துவைக்கவில்லையே! அவர் மரணம் என்னை உலுக்கி விட்டது. ஆனாலும் என்ன... அவர் மறைந்துவிட்டாலும், என் வீட்டில் என் அருகிலேயேதான் இருக்கிறார். இதோ பாருங்கள்!"

பாலசந்தர் சுட்டிக்காட்டிய இடத்தில், இரண்டடி உயரத்தில் கண்ணாடிக் கூண்டோடு ஓர் அற்புத மெமெண்டோ! தாமரை மீது ஒரு பெண் வளைந்து குழலூதிக்கொண்டிருக்க, V என்ற என்ற எழுத்து; அருகே, சத்யஜித்ரேயின் வண்ணப்படம்!

என் ஞானகுருவை என் வீட்டுக்குள் அழைத்து வந்தவர் மணிரத்னம்! - கே.பாலசந்தர்


"அகில இந்திய ரீதியில் ஆண்டுதோறும் சிறந்த மூன்று படங்களையும், சிறந்த மூன்று டைரக்டர்களையும் தேர்வு செய்து, சத்ய ஜித்ரே நினைவாக, அவரது மகன் கிரண்சாந்தாராம் பரிசு அளிக்கிறார். போக வரச் செலவு கொடுத்து, மெமெண்டோ வோடு ரொக்கப் பரிசும் தருகிறார்கள். எங்கள் நிறுவ னமான கவிதாலயாவுக்கு டைரக்டர் மணிரத்னம் இயக்கி உருவாக்கிய 'ரோஜா' படத்தை இரண்டாவது சிறந்த படமாகத் தேர்வு செய்து, விழா நடத்தி, 20,000 ரூபாயுடன் அளித்த மெமெண்டோ இது. அகில் இந்திய ரீதியில், 'ரோஜா' மூலம் மணிரத்னம் சிறந்த டைரக்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 40,000 ரூபாய் விருது வழங்கப்பெற்றார். தயாரிப்பா ளர் என்ற முறையில் நானே நேரில் போய்ப் பரிசை வாங்கி வந்தேன். எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா? எத்தனையோ விருதுகளை வாங்கியிருக்கிறேன்... ஆயினும், இந்த விருதைப் பெற்ற போது என் மேனியே புல்லரித்தது. எனக்கு இத்தகைய பெருமையைத் தேடித் தந்தவர் டைரக்டர் மணிரத் னம். எல்லா வகையிலும் என்னைக் கவர்ந்த சத்யஜித்ரேக்கு 'டின்னர்' தரும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்கவில்லை. என் ஞானகுருவை என் வீட்டுக்குள்ளேயே அழைத்து வந்து பெருமை சேர்த்த மணிரத் னத்தை தம்பதி சமேதராய் 'டின்னர்' கெஸ்ட்டாக அழைக்க விரும்புகிறேன்..!" - பாலசந்தர் மேனியெங்கும் பூரிப்பு!

"டின்னரை எங்கே வைத்துக் கொள்வீர்கள்... வீட்டிலா, ஓட்டலிலா..?"

"பொதுவா, நான் அதைத் தரம் பிரிச்சுக்கறது உண்டு. ரொம்ப நெருக்கமா உள்ளவங்க, ஃபேமிலி லைக்கா இருக்கிறவங்கன்னு நினைச்சா, வீட்டிலேயேதான் விருந்து கொடுப்பேன். அதுலதான் குளோஸா கான்டாக்ட் கிடைக்கும். மணிரத்னத்தைப் பொறுத்தவரையில், எங்க வீட்டுக்கே வரவழைச்சு விருந்து கொடுக்கத்தான் பிரியப்படறேன்!"

"என்னென்ன டிஷ்ஷஸ் கொடுப்பீங்க...?"

"எனக்கென்னவோ இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், சாதம் இப்படின்னு சவுத் இண்டியன் சாப்பாடுதான் பிடிக்கும். வர்றவங்க ளுக்கு நிறைய வெரைட்டி போட வேண்டாமா...? அதனால, எல்லா வகையும் இருக்கும். நாங்க பியூர் வெஜிடேரியன். மணிரத்னமும் அப்படித்தான்!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஞானகுருவை என் வீட்டுக்குள் அழைத்து வந்தவர் மணிரத்னம்! - கே.பாலசந்தர்

"அவரோடு என்ன பேசுவீர்கள்..?"

"இன்றைக்கு வரை நான் ஆசைப்பட்டும், ஷூட்டிங் நேரத்தில் அவரைப் பார்க்க முடிஞ்சதில்லை. அதனால, அடுத்து அவர் படம் எடுக்கறச்சே- யாருக்காக எடுத்தாலும் சரி- இரண்டு நாளைக்கு அவர் கூடவே இருந்து, அவர் படமாக்குகிற விதத்தைப் பார்க்கணும்னு அவர்கிட்டே கேட்பேன். நடிகர்- நடிகைகள்கிட்டே எப்படி அவர் வேலை வாங்கறார்னு தெரிஞ்சுக்கணும். தவிர, சில தொழில் ரகசியங்களையும் அவர்கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்குவேன்."

"விருந்தின் முடிவில் அவருக்குப் பரிசு ஏதாவது கொடுப்பீர்களா..?"

"கண்டிப்பா உண்டு! மணிக்கு அகல ஜரிகை போட்ட நல்ல பட்டு வேட்டி; சுஹாசினிக்குப் பட்டுச்சேலை; குழந்தைக்கு அழகான டிரஸ்! 'ரோஜா' படம் மூலம் எனக்குப் பெயர், புகழ், பெருமைகளோடு பல பரிசுகளையும் வாங்கிக் குவித்திருக்கிற மணிரத்னத்துக்கு என்ன பரிசு கொடுத்தாலும் தகுமே!"

பாலசந்தரின் முகம் நிறைய சந்தோஷம்... அவர் பார்வை, ஓர் இடத்தில் மொய்த்தது. அங்கே - மணிரத்னம் பெற்றுத் தந்த சத்யஜித்ரே அவார்டு கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது!
    
- 'புல்லட் அங்கிள்'                            
    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism