Published:Updated:

'யங் சூப்பர்ஸ்டார்' பட்டத்தை சிம்பு துறந்தது ஏன்?

Vikatan Correspondent
'யங் சூப்பர்ஸ்டார்' பட்டத்தை சிம்பு துறந்தது ஏன்?
'யங் சூப்பர்ஸ்டார்' பட்டத்தை சிம்பு துறந்தது ஏன்?

ஆன்மிக ஈடுபாடு தன்னுடைய மாற்றங்களுக்கு பெரிதும் உதவும் என்பதில் தீவிரமாக நம்புகிறார் சிம்பு . அதற்கான முதல் வழியாக ' யங் சூப்பர்ஸ்டார்' என்னும் பட்டதைத் துறக்கிறார்.

'' இந்தத் தேவையற்ற சுமைகளை என் வாழ்வில் இருந்து அகற்ற முடிவு செய்து உள்ளேன். என்னுடைய திரை வாழ்வில் நான் முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளேன். என்னுடைய இமேஜ் , அது என்னுடைய ரசிகர்கள் இடையே ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றை முக்கியமென உணர்ந்து வருகிறேன்.

சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டவன் என்ற முறையில் முக்கியத்துவம் இல்லாத பட்டங்கள் வளரும் கலைஞனுக்கு அவசியமற்றது என கருத ஆரம்பித்து இருக்கிறேன். திரையில் என் மீது அன்பு கொண்டவர்களை தாண்டி , எல்லோருடைய அன்பையும் மரியாதையையும் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.

பட்டம் துறப்பது என்ற என்னுடைய இந்த முடிவு அதற்கான முதல் வழியாகும். என்னுடன் என்றென்றும் இருக்கும் , இருக்கப் போகும் என் இனிய ரசிகர்கள் இந்த முடிவை ஏற்று ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன் '' என்று சிம்பு தெரிவித்துள்ளார்.