Published:Updated:

'மெயின் ஹூன் ரஜினிகாந்த்' படத்தை எதிர்த்து ரஜினிகாந்த் வழக்கு!

Vikatan Correspondent
'மெயின் ஹூன் ரஜினிகாந்த்' படத்தை எதிர்த்து ரஜினிகாந்த் வழக்கு!
'மெயின் ஹூன் ரஜினிகாந்த்' படத்தை எதிர்த்து ரஜினிகாந்த் வழக்கு!

'மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற இந்திப் படத்தில் தனது பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் '' 'மெயின் ஹூன் ரஜினிகாந்த்' என்ற இந்திப் படத்தில், எனது அனுமதியின்றி எனது பெயரைப் பயன்படுத்தியுள்ளனர்.  எனது பெயர் மற்றும் எனது புகைப்படம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

'மெயின் ஹூன் ரஜினிகாந்த்' படத்தை எதிர்த்து ரஜினிகாந்த் வழக்கு!

 இந்த மனுவை விசாரித்த நீதிபதி படத்தை வரும் 25ஆம் தேதி வரை வெளியிட தடைவிதித்து உத்தரவிட்டார்.

ஃபைசல் சயீப் இந்த படத்தை இயக்கியுள்ளார். தமிழ்ப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த ஆதித்ய மேனன் இதில் நாயகனாகவும், கவிதா ராதேஷ்யாம் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

படத்தில் நாயகனுக்கு கில்லர் ரஜினிகாந்த் ராவ் என்ற பெயர். பொறுக்கித்தனம், கிறுக்குத்தனம் மிக்க சிபிஐ அதிகாரி வேடமாம் அவருக்கு.

ரஜினியின் இமேஜைக் கெடுக்கும் அத்தனை விஷயங்களையும் படத்தில் காட்சிகளாக வைத்துள்ளார்கள் என படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.