Published:Updated:

செம பன்ச்!

செம பன்ச்!
செம பன்ச்!

செம பன்ச்!

செம பன்ச்!

நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள், நிஜ மேரிகோமை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வாங்கியது மட்டும் இல்லை. உலக அமெச்சூர் பாக்ஸிங் போட்டிகளில் மட்டும் ஐந்து முறை தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியனாக ஜொலித்தவர்். இந்தியாவின் சபிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் எளிமையான விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். பத்ம, பத்மபூஷண், அர்ஜூனா, ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது என இந்தியாவின் முக்கிய பெரும் விருதுகளை வாரிக் குவித்தவர். இந்த விஷயங்கள் அத்தனையும் சமீபத்தில் ரிலீஸான 'மேரிகோம்’ படத்திலும் அப்படியே பதிவு செய்திருக்கிறார்கள் படத்தின் இயக்குநர் ஓமங் குமாரும் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியும்.

'மேரி கோம்’ படத்தில் ஒரு 'ரொமான்டிசைஸ்’ பண்ணப்பட்ட சாதனைப் பெண்மணியைப் பார்க்க முடிகிறது. விசிலடித்துக்கொண்டாடுகிறான் ரசிகன். படத்தின் முடிவில் தேசிய கீதம்

செம பன்ச்!

ஒலிபரப்பாகும்போது எல்லோரும் எழுந்து நின்று ஜெய்ஹிந்த் சொல்கிறார்கள். படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் சிறப்பாக செய் திருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா மிகச்சிறப்பு.

பாக்ஸிங் கோச்சாக நடித்திருக்கும் சுனில் தபா, மேரிகோமின் நிஜ கோச்சான மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நரிஜித் சிங்கை ஞாபகப்படுத்துகிறார். அவருக்கும் மேரிகோமுக்குமான தந்தை, மகள் உறவைப் போன்ற அன்பை அழகாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குநர். தன் பேச்சைக் கேட்காமல் மணமுடித்துச் செல்லும் மேரிகோமின் காரின் பின்னால் கயிற்றில் கட்டி இருக்கும் பலூன்கள் அவர் கண்ணுக்கு மட்டும் பாக்ஸிங் க்ளவுஸ்கள் போல தெரிவது ஒரு சாம்பிள் கவிதை.

பாக்ஸிங்கில் பதக்கம் வாங்கிய தன் மகளைப் பற்றி பேப்பரில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் தந்தையின் கோபம் பின்நாட் களில் தன் மகள் இந்தியாவே அறிந்த பிரபலமாக உருவாகும்போது கூனிக் குறுகி மகளை பாசத்துடன் எதிர் கொள்ளும்போது நமக்குள் ஒரு சிலிர்ப்பு உருவாகிறது.

சவாலை எதிர்கொண்டு ஜெயிக்கும் மேரிகோமுக்கு நிஜ சவால் பின்பாதியில் தான் வருகிறது. காதல் திருமணத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்ததும் அவர் பாக்ஸிங் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தவிக்குமிடம் அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கணவரின் துணையோடு மீண்டும் விளையாட வரும் மேரிகோமுக்கு உடல் மற்றும் மனரீதியான சவால்கள் காத்திருக்கின்றன. கூடவே இந்தியாவின் சாபக்கேடான 'டர்ட்டி பாலிடிக்ஸ்’. இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு எப்படி வெற்றி பெற்றார் என்ற சம்பவங்களோடு படம் முடிகிறது.

செம பன்ச்!

''இந்தப் படம் என்னை வடகிழக்கு மாநிலங்களையும் தாண்டி இந்தியா முழுமைக்கும் கொண்டுசேர்த்திருக்கிறது. இப்போது என்னை இன்னும் பலர் பெருமை பொங்கப் பார்க்கிறார்கள்'' என்கிறார் குழந்தையின் குதுகலத்தோடு மேரி கோம்.

பிரியங்கா சோப்ராவோ, ''இந்தப் படத்தில் தைரியமாக பாக்ஸிங் ஃபெடரேஷன் என்றால் வெறும் டீயும் வாழைப்பழமும் வாங்கிக் கொடுத்து வீரர்களை ஊக்குவிக்கும் இடம் என்பதை அழகாக உணர்த்தி இருக்கிறார் டைரக்டர் ஓமங் குமார். வெளிநாட்டுக்கு விளையாட அழைத்துப்போய் தங்கள் குடும்பங்களோடு ஷாப்பிங் போகும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் இருக்கும்வரை பல மேரிகோம்கள் உள்ளுக்குள் புழுங்கி வெளியுலகுக்குத் தெரியாமலே போய்விடுகிறார்கள். இவ்வளவு தடைகளையும் தாண்டி ஜெயித்துக்காட்டிய ஒரு பெண்ணை திரையில் காட்டியதில் என் பங்கும் இருப்பதில் பெருமைப்படுகிறேன். அதே சமயத்தில் இந்திய விளையாட்டுத் துறை இந்தப் படத்தின் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார் தைரியமாக.

சபாஷ் மேரி சோப்ரா!

ஆர்.சரண்

அடுத்த கட்டுரைக்கு