Published:Updated:

இணையத்தை கலக்கும் ஐ, கத்தி படங்கள் !

Vikatan Correspondent
இணையத்தை கலக்கும் ஐ, கத்தி படங்கள் !
இணையத்தை கலக்கும் ஐ, கத்தி படங்கள் !

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் படம் ’ஐ’. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி இணையம் முழுக்க வைரள் ஆனது.

கூகுள் தேடுதல் தளத்திலும், சில சர்ச்சைகளில் இருந்த தீபிகா படுகோனேவை முந்தியடித்து ‘ஐ’ படம் முதலிடம் பிடித்தது. 

’ஐ’ படத்தின் இசை வெளியீடு குறித்த செய்திகள் இப்போதும் சிலாகிக்கப்படும் நிலையில்,  ’கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா நடத்திய  பத்திரிகையாளர் சந்திப்பு,  படத்தின் இசை வெளியீட்டு விழா என அடுத்தடுத்த தகவல்கள் அனல் பறக்கத் துவங்கியுள்ளன.

’கத்தி’ மற்றும் ‘ஐ’ படங்கள் போட்டி போட்டுக்கொண்டு சமூக வலை தளங்கள் உள்ளிட்ட இணையம் முழுக்க ஹாட் செய்தியாக வலம் வரும் நிலையில் இவ்விரண்டு படங்களுக்கும் பெருத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.