Published:Updated:

என்னைத் தியாகின்னு சொல்லமாட்டேன். ஆனா, துரோகி கிடையாது - விஜய்

என்னைத் தியாகின்னு சொல்லமாட்டேன். ஆனா, துரோகி கிடையாது - விஜய்
என்னைத் தியாகின்னு சொல்லமாட்டேன். ஆனா, துரோகி கிடையாது - விஜய்

'கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய், சமந்தா, சதீஷ், அனிருத் உட்பட பல பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இதில் விஜய் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

''ஒருத்தரை ஒருத்தர் சண்டை போட்டுக்கணும்ங்கிறதுக்காக நாங்க படம் பண்ணலை. எல்லாரும் சந்தோஷமா ரசிக்கணும்னுதான் படம் பண்ணியிருக்கோம்.

என்னைத் தியாகின்னு சொல்லமாட்டேன். ஆனா, நான் துரோகி கிடையாது. இது தமிழ்நாடு. நான் தமிழன்.

எந்த மக்களுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ படம் பண்ணவில்லை. உண்மைக்கு விளக்கம் சொன்னா தெளிவு கிடைக்கும். வதந்திக்கு விளக்கம் சொன்னா உண்மை ஆகிடும்.'' என்றார்.