Published:Updated:

இந்த வாழ்க்கை தமிழ் மக்கள் போட்ட பிச்சை - ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்!

விகடன் விமர்சனக்குழு
இந்த வாழ்க்கை தமிழ் மக்கள் போட்ட பிச்சை - ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்!
இந்த வாழ்க்கை தமிழ் மக்கள் போட்ட பிச்சை - ஏ.ஆர்.முருகதாஸ் உருக்கம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து தீபாவளி வெளியீடாக வரவிருக்கும் படம் ‘கத்தி’. இப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

’கத்தி’ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீடு நேற்று மாலை நடைபெற்றது. படத்திற்கு ஆர்யா, சிபிராஜ், விஜய், சிம்புதேவன், தரணி, சசி, தங்கர்பச்சான், தாணு மற்றும் கேயார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

படத்திற்காக வேலை செய்த அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டு ஏ.ஆர்.முருகதாஸ்பேசத் துவங்கினார்.

''  ‘துப்பாக்கி’ கொடுத்த வெற்றி எனக்கு இன்னும் மன அழுத்தத்தை அதிகரித்து விட்டது. ஆனாலும் அது ஆனந்தமான மன அழுத்தமே. ‘துப்பாக்கி’ படத்தைக் காட்டிலும் ’கத்தி’ நன்றாக வரவேண்டும் என்ற அழுத்தம் என கூறினார்.

விஜய்யை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் பேப்பரில் இடைவேளைக்குப் பிறகு ‘ஐ யம் வெயிட்டிங்’ என எழுதி இருந்தேன் அவ்வளவுதான். அந்த ஒற்றை வார்த்தை படத்திற்கு மிக பிரம்மாண்டமாக அமைந்தது என்றால் அது விஜய்யால்தான். அவர்தான் தலையை அசைத்து 'ஐ யம் வெயிட்டிங்' என்று கூறி ஹைப் கொடுத்தார்.

 100 சதவீதம் திருப்தியாக ’கத்தி’ படம் வந்திருக்கிறது. தீபாவளி ரிலீஸ், பட வேலைகள், இடையில் சில பிரச்னைகள் என ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து விட்டேன். எனக்கு நினைவு திரும்பும் வரை கூடவே இருந்தார் விஜய் என கூறி நெகிழ்ந்தார் ஏ.ஆர்,முருகதாஸ்.

நினைவு வந்த போது டாக்டர் ’இவர் யார்னு தெரியுதா?’ என்று கேட்டார், தமிழ்நாட்ல இவரை தெரியலை என்று கூறினால் என் மகனே என்னை அடிப்பான் எனக் கூறி விஜய்யை புகழ்ந்தார் ஏ.ஆர்.

 ‘துப்பாக்கி’ ஜெகதீஷ், ‘கத்தி’ ஜீவானந்தம் மற்றும் கதிரேசன்0 எந்த கதாபாத்திரம் உங்களைக் கவர்ந்தது என்று விஜய்யிடம் இரண்டொரு நாட்களுக்கு முன்பு கேட்டேன். அதற்கு விஜய் கதிரேசன் என்றார்.  கண்டிப்பாக கதிரேசன் ரசிகர்கள் மனதிலும் நிற்பார்.

எனக்கு முதல் படத்தில் 500 ரூபாய் சம்பளம், இரண்டாவது படத்தில் பத்தாயிரம், தமிழில் நான் வாங்கும் சம்பளத்தை காட்டிலும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் சம்பளம் அதிகம். 

நான் சம்பளத்திற்காக வேலை செய்யவில்லை.சென்னையைத் தாண்டி ஒரு கிராமத்திலிருந்து வந்தவன் இந்தியில் படம் பண்ண முடியுமா என்ற கேள்விக்கு பதிலடி கொடுக்கவே இந்தியில் படம் இயக்குகிறேன்

மற்றபடி எங்கு சென்றாலும் தமிழ் மக்களுக்கு எதிராக நான் என்றைக்குமே நடக்க மாட்டேன். இந்த வாழ்க்கையே தமிழ் மக்கள் போட்ட பிச்சை என சற்றே உருக்கமாகப் பேசினார்.