Published:Updated:

தாலாட்டுப் பாடலில் தல!

விகடன் விமர்சனக்குழு
தாலாட்டுப் பாடலில் தல!
தாலாட்டுப் பாடலில் தல!

கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தல 55’ . தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

சமீபத்தில் சிக்கிம், ஜோத்பூர், ஜெய்ப்பூர், சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் ஒரு பாடல் காட்சியை  ‘தல 55’ டீம் படமாக்கியுள்ளது.

தாலாட்டுப் பாடலில் தல!

அஜித், த்ரிஷா மற்றும் பேபி அனிகா பங்கு பெறும் இந்த பாடல் ஒரு தாலாட்டுப் பாடலாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி இருக்கும் இந்தப் பாடல் குறித்து தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார் ஹாரிஸ்.

''கௌதம் படத்தில் மூன்று பாடல்கள் முடிந்து விட்டன. அஜித்தை தாலாட்டுப் பாடலில் பார்ப்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் '' என தெரிவித்துள்ளார். 

தீபாவளி படங்களான, ‘ஐ’, ‘கத்தி’ படங்களின் புரமோஷன்கள் இணையத்தில் கலக்கி வரும் இந்நேரத்தில், ரசிகர்கள் ‘தல 55’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராவது வராதா என எதிர்பார்க்கத் துவங்கி விட்டனர்.