Published:Updated:

கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?

Vikatan Correspondent
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?

மிஷ்கின் படத்தில் குத்துப்பாட்டு என்றாலே மஞ்சள் சேலை என்று முடிவுக்கு வந்துவிடலாம்.  யோசித்துப்பார்த்ததில் கிளாமர் பாட்டுகள் பலவற்றில் மஞ்சள் சேலை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதையும் தான் ஆராய்ச்சி செஞ்சிப் பார்த்திடுவோமே... 

கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?

இந்த மஞ்சள் மேனியா பாலிவுட்டில் 80களின் துவக்கத்திலேயே ஆரம்பித்து விட்டது. அனில்

கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?

கபூருடன் மாதுரி தீட்ஷித் ஆடிய 'தக் தக்’ பாடலை மறக்க முடியுமா என்ன? மிஷ்கினுக்கு இந்த விஷயத்தில் பாலிவுட் முன்னோடிகள் அக்‌ஷய் குமாரும் அனில் கபூரும். பெரும்பாலும் தாங்கள் நடிக்கும் படங்களில் ஹீரோயினை மஞ்சள் புடவை கட்டவைத்து மழையில் ஒரு ரொமான்ஸ் பாடல் நிச்சயம். உதாரணத்துக்கு ரவீனா டாண்டனுடன் அக்‌ஷய் ஆடிய 'டிப் டிப் பர்சா’, மற்றும் காத்ரீனாவுடன் ஆடிய 'டி தனா தன்’ பாடல் இரண்டையும் சற்றே கொசுவர்த்தி சுருள் சுற்றிப் பாருங்கள்.

அங்கே அப்படி என்றால் நம் கோலிவுட்டில் ’சத்ரியன்’ படத்தில் மஞ்சள் சேலையில் பானுப்ரியா தொடங்கி சிம்ரன், நமீதா, ஏன் அனுஷ்காவின் ’வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரை வந்தது.

சினிமா இணையங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது 'கன்னியும் காளையும் செம காதல்’ படத்தின் ஸ்டில்களில் ஹீரோயின் சூடாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அதிலும் அதே மஞ்சள் சேலை. 'அப்படி என்னதான் இந்த மஞ்சள் சேலையில் மகிமை இருக்கு?’ என்று அந்தப் படத்தின் டைரக்டர் வடிவுடையானிடம் கேட்டதற்கு...

கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?

''கருப்பு, சிவப்பு சேலை போன்றவை நடிகைகளின் தோல் வண்ணத்தை சற்றே டம்மியாக்கிவிடும். முன்பு மழைப்பாட்டு, கிளாமர் பாட்டு என்றால் வெள்ளை சேலை அணிந்துவந்தார்கள். ஆனால் வெள்ளைச் சேலை பேய்களின் யூனிஃபார்ம் ஆனதாலோ என்னவோ, அந்த இடத்தை மஞ்சள் சேலை பிடித்துக்கொண்டது. மஞ்சள் நிறம் ஹீரோயின்களின் ஸ்கின் கலருடன் ரொம்பவே ஒத்துப்போகும். மேலும் கிளாமர் சாதாரணமாக இருந்தாலும் மஞ்சள் வண்ணங்களில் கொஞ்சம் தூக்கலாகத் தெரியும். எனவேதான் இப்படி' என்றார்.

இப்போ டவுட் க்ளியர் ஆச்சா?

  ஷாலினி நியூட்டன்