Published:Updated:

மகளிர் மட்டும் சினிமா!

விகடன் விமர்சனக்குழு
மகளிர் மட்டும் சினிமா!
மகளிர் மட்டும் சினிமா!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நடிகை என்ற அளவில் மட்டுமே பெண்களின் பங்களிப்பு இருக் கும். எப்போதாவது பெண் இயக்குநர்கள், பெண் ஒளிப்பதிவாளர்கள், பெண் பாடலாசிரியர்கள் வருவார்கள். ஆனால் கன்னடத்தில் 'ரிங் ரோடு சுபா’ என்ற படத்தில் அனைத்து டெக்னீசியன்களும் பெண்கள்தான்.

மகளிர் மட்டும் சினிமா!

ஓவியர், புகைப்படக் கலைஞர், குறும்பட இயக் குநர் என பன்முகம்கொண்ட ப்ரியா பெல்லியப்பா என்ற பெண்மணி இயக்கும் முதல் திரைப்படம் இது. கர்நாடகாவைச் சேர்ந்த இவர் புனே திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம் படித்தவர். இவர் மட்டுமல்ல 'சுபா’ கேரக்டரில் நடிக்கும் குஷி, படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சனி ரவீந்திரதாஸ், வசன கர்த்தா ரேகா ராணி, ஒளிப்பதிவாளர் ரேஷ்மி சேகர், இசையமைப்பாளர் வாணி ஹரி கிருஷ்ணா, படத்தொகுப்பாளர் மரியா டிஸோசா, மேக்கப் வுமன் பூனம் பிரசாத், ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா கிருஷ்ணா, கலை இயக்குநர் சித்ரலேகா ஷெட்டி, புகைப்படக் கலைஞர்கள் அவிஷா மற்றும் மெஹிஷா, நடனக் கலைஞர்கள் மயூரி, சந்திரிகா, ஷக்தி என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே பெண்கள் தான்.

மகளிர் மட்டும் சினிமா!

''முழுக்க முழுக்க பெண்களே உருவாக் கும் படமாக 'ரிங்ரோடு சுபா’ இருக் கணும்னு திட்டமிட்டுதான் ஆரம்பிச்சோம். அதுக்காக இது ஆண்களுக்கு எதிரான படமா இருக்குமோனு கற்பனை பண்ணாதீங்க. படத்தோட போஸ்டர் களைப் பார்த்துட்டு நிறையப் பேர் அப்படித்தான் சொன்னாங்க. ஆனா,  இது ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்ட க்ரைம் த்ரில்லர். பெங்களூரில் 2003ம் ஆண்டு சுபா என்கிற பெண் ஒருவர் தனக்கு நிச்சயிக்கப்பட்டவரைக் கொலை செய்தார். இந்தச் சம்பவத்தோடு கொஞ்சம் கமர்ஷியலையும் சேர்த்து 'ரிங்ரோடு சுபா’ படத்தை எடுத்திருக்கோம். இந்தப் படத்தில் வொர்க் பண்ணியிருக்கிற பெண்கள் எல்லோருமே வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அனைவரையும் ஒன்று சேர்க்க கொஞ்சம் கஷ்டமாதான் இருந் துச்சி. குறிப்பாக சினிமாவில் மேக்கப் வுமனாகப் பணி புரியும் பெண்கள் கண்ணில் படவே யில்லை. இங்கே பெண்களுக்கான இடம் ரொம்ப கம்மியாதான் இருக்கு. இந்த நிலைமையை மாத்துறதுக்கான சின்ன முயற்சியை நான் எடுத்திருக்கேன்'' என்று முடிக்கிறார் ப்ரியா பெல்லியப்பா.

வெல்டன் ப்ரியா!

கே.ஜி.மணிகண்டன்