Published:Updated:

செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவை இணைத்த தனுஷ்!

Vikatan Correspondent
செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவை இணைத்த தனுஷ்!
செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவை இணைத்த தனுஷ்!

சமீபத்தில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது ட்விட்டர் தளத்தில் செல்வராகவன் , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா இணையும் அடுத்த படம் குறித்து வெளியிட்டிருந்தார்.

இப்போது இந்தப் படம் குறித்த அடுத்த கட்ட தகவலாக , தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில் செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் அரவிந்த் கிருஷ்ணா இணைந்த புகைப்படத்தை வெளியிட்டார். அதில். '' வுண்டர்பார் பேனரில் லெஜண்டரி காம்பினேஷன் இணையும் அறிவிப்புக்காக காத்திருங்கள் '' என ட்வீட் செய்துள்ளார். 

’இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு செல்வராகவன் தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் படம் இயக்க உள்ளார் எனத் தெரிகிறது.

செல்வராகவன் - யுவன் ஷங்கர் ராஜாவை இணைத்த தனுஷ்!

பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தில் செல்வராகவனும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைகிறார்கள் என்பதே இப்போது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சி.

நடிகர்கள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.