Published:Updated:

பாய்ஸ்... தைரியம் இருக்கா?

பாய்ஸ்... தைரியம் இருக்கா?
பாய்ஸ்... தைரியம் இருக்கா?

ன்னப் பறவை போன்ற சின்ன உருவமும், மின்னல்கள் ஓடி மறையும் பெரிய கண்களும் ஆனந்தி ஸ்பெஷல். ஈர்க்கும் மாநிறம் எக்ஸ்ட்ரா மைலேஜ் கொடுக்க, முதல் படம் 'பொறியாளன்’... அழகான அடையாளம். தெலுங்கு ரக்ஷிதா, தமிழ் ஆனந்தி ஆனதன் பலனாக, பிரபு சாலமன் இயக்கும் 'கயல்’, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக 'த்ரிஷா இல்லனா நயன்தாரா’, சற்குணம் இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடி என ஆனந்தி செம பிஸி.  

''நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் ஆந்திராவோட வாரங்கல். அப்பா ராஜேஷ்வர் ராவ், அங்கே நகைக்கடை வெச்சிருக்கார். அம்மா ரஜ்னி, ஒரு பியூட்டீஷியன். எனக்கு பைலட் ஆகணும்னு ஆசை. ஆனா ஃபேஷன் டிசைனிங் படிக்குறேன். மா டி.வி, ஜீ டி.வி-யில் டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துக்கிட்டேன். அப்போ, 'பஸ் ஸ்டாப்’ படத்தோட இயக்குநர் மாருதி தசாரி நடிக்கக் கூப்பிட்டார். அந்தப் படத்தில் ஸ்ரீதிவ்யாவும் நானும் சேர்ந்து நடிச்சோம். இப்போவரைக்கும் ஸ்ரீதிவ்யா என்னோட குட் ஃப்ரெண்ட். ரெண்டு தெலுங்குப் படங்களில் நடிச்சிட்டு இருந்தப்போ 'பொறியாளன்’ படத்துல நடிக்க மணிமாறன் சார் கூப்பிட்டார். தமிழ் சினிமா எனக்கு எப்பவுமே பிடிக்கும். அந்தப் படம் கமிட் ஆன 10-வது நாள்ல 'கயல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. நான் ரொம்ப லக்கி!''

பாய்ஸ்... தைரியம் இருக்கா?

''ரக்ஷிதா ஏன் ஆனந்தி ஆனாங்க?''

''தமிழ் நேட்டிவிட்டிக்காக பிரபு சாலமன் சார்தான் 'ஆனந்தி’னு பெயர் மாத்தினார். எனக்கும் அதில் சந்தோஷம். வீட்ல என்னை ரக்‌ஷிதானுதான் கூப்பிடுவாங்க. அது அப்பா ஆசைஆசையா வெச்ச பேர். அதை அப்படியே விட்டுவிட மனசு இல்லை. ஆனா எனக்கு இந்த ரெண்டு பேரையும்விட 'கயல்’ங்கிற பேர் ரொம்பப் பிடிச்சிருக்கு!''

''பிரபு சாலமன் எப்படி உங்களை செலக்ட் பண்ணினார்?''

''எனக்கு 'கும்கி’ படம் ரொம்பப் பிடிக்கும். லட்சுமி மேனன் நடிச்ச 'அல்லி’ கேரக்டர் மேல பெரிய கிரேஸ் உண்டு. 'கயல்’ படத்துல நடிக்க ஆடிஷன் நடக்குதுன்னு தெரிஞ்சதும் கலந்துக்கிட்டேன். ஹீரோயினுக்கான ஆடிஷன், ஹீரோவோட சேர்ந்து ஒரு ஆடிஷன்னு ரெண்டுலயும் செலக்ட் ஆனேன். 'கயல்’ பட ஹீரோயினுக்கு டயலாக்ஸ் ரொம்பக் கம்மி. பெரும்பாலும் கண்களாலேயே பேசணும். 'எமோஷன் ஃபீலிங்கைக் கொண்டுவர்ற கண்கள் உனக்கு இருக்கு. தமிழ் கத்துக்கிட்டா நீயே டப்பிங் பேசலாம்’னு பிரபு சாலமன் சார் சொன்னார். கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்கிட்டு, கடைசியில் நானே டப்பிங் பேசிட்டேன். பிரபு சாலமன் சார் என்னோட டீச்சர். ஒழுக்கம், நேரம் தவறாமைனு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்திருக்கார். அதை எப்பவும் ஃபாலோ பண்ணுவேன்!''

''தமிழ் சினிமாவில் பிடிச்சது?''

''தெலுங்கு சினிமாவில் நேட்டிவிட்டி இருக்காது. ஆனால், தமிழ் சினிமாவில் நேட்டிவிட்டி அதிகம். இங்கேதான் நயன்தாரா, அனுஷ்கா, அமலா பால்னு ஹீரோயின்கள் தனியா தெரியுறாங்க. இங்கதான் நல்ல கேரக்டர்கள் பண்ண முடியும்!''

பாய்ஸ்... தைரியம் இருக்கா?

''ஆனந்தியோட நிஜ கேரக்டர் என்ன?''

''நான் கொஞ்சம் ஷார்ட் டெம்பர். அடிக்கடி சண்டை போடுவேன். ஆனா, அடுத்த நிமிஷம் நானே சமாதானம் ஆகிடுவேன். ஈகோ பார்க்க மாட்டேன். ஈஸியா எல்லார்கூடவும் பழகிருவேன். சேத்தன் பகத் புத்தகங்கள்னா... தூங்காமக்கூட படிப்பேன்!  

படிக்கும்போது நான் ஸ்கூல் பீப்பிள் லீடர். ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன். ஒழுக்கம்தான் முக்கியம்னு பேசுவேன். நான் 10-வது படிக்கும்போது பிப்ரவரி-14 அன்னைக்கு புரோபோஸ் பண்ண வந்த ஒரு பையன், பயத்துல சாக்லேட் மட்டும் கொடுத்துட்டு ஓடிட்டான். அதை இப்போ நெனைச்சாலும் சிரிப்புதான் வரும். ஏன்ப்பா இப்படிப் பயப்படுறீங்க? பசங்கன்னா தைரியம் இருக்கணும்; தைரியமா புரபோஸ் பண்ணணும். ஆனா நான் கண்டிப்பா ரிஜெக்ட் பண்ணுவேன். ஏன்னா, நான் இப்போ ஹீரோயின்ல!'' - ஜாலியாகச் சிரிக்குது பொண்ணு.

நிஜமாத்தான் சொல்றியா ஆனந்தி?

- க.நாகப்பன்