Published:Updated:

ஸ்ரேயா ரெட்டி ரீ- என்ட்ரி ஆகும் 'அண்டாவைக் காணோம்!'

ஸ்ரேயா ரெட்டி ரீ- என்ட்ரி ஆகும் 'அண்டாவைக் காணோம்!'
ஸ்ரேயா ரெட்டி ரீ- என்ட்ரி ஆகும் 'அண்டாவைக் காணோம்!'

'சாமுராய்', 'திமிரு', 'வெயில்','பள்ளிக்கூடம்', 'காஞ்சிவரம்' ஆகிய படங்களில் நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. 'திமிரு' படத்தில் வில்லியாக நடித்து அழுத்தமான அடையாளம் பெற்றவர்.

விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவைத் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா ரெட்டி  சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை. தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.

ஸ்ரேயா ரெட்டி ரீ- என்ட்ரி ஆகும் 'அண்டாவைக் காணோம்!'

ஸ்ரேயா ரெட்டி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு 'அண்டாவைக் காணோம்' என்று டைட்டில் வைத்துள்ளனர். அறிமுக இயக்குநர் வேலு இயக்கும் இப்படத்துக்கு 'முண்டாசுப்பட்டி' கேமராமேன் சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார்.

'' எளிய கிராமத்து மனிதர்களுக்கிடையே நடக்கும் சின்னக் கதையை வைத்தே, நகைச்சுவையையும் , கலாச்சாரங்களையும் பதிவு செய்யும் படமாக இது இருக்கும்'' என்கிறார் இயக்குநர் வேலு.

- ம.மாரிமுத்து (மாணவப்பத்திரிகையாளர்)