Published:Updated:

’கத்தி’, ‘பூஜை’ படங்களுக்கு சென்சார் சான்று!

’கத்தி’, ‘பூஜை’ படங்களுக்கு சென்சார் சான்று!
’கத்தி’, ‘பூஜை’ படங்களுக்கு சென்சார் சான்று!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து அனிரூத் இசையில் உருவாகியிருக்கும் படம் ’கத்தி’. படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளது.படத்தை பார்த்த தணிக்கை குழு ’யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

அதேபோல் ‘தாமிரபரணி’ படத்திற்கு பிறகு விஷால், ஹரி மீண்டும் இணைந்துள்ள படம் ’பூஜை’. விஷால் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை விஷால் தயாரித்துள்ளார்.

இந்தப்படமும் தீபவளிக்கு ரிலீசாக உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாக கூறி யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.

’கத்தி’, ‘பூஜை’ படங்களுக்கு சென்சார் சான்று!

பொதுவாக ’யு’ சான்று பெற்ற படத்திற்கு மட்டுமே வரிவிலக்கு கிடைக்கும். இதனால் ‘கத்தி’ படத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை.

இப்போது ’பூஜை’ படத்திற்கு தான் யு/ஏ சான்று கிடைத்துள்ளதால் வரி விலக்கு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே ’பூஜை’ படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி ’யு’ சான்று பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர் படக்குழுவினர்.