Published:Updated:

அஜித், விஜய்யை இயக்கத் தயார் - ஹரி!

Vikatan Correspondent
அஜித், விஜய்யை இயக்கத் தயார் - ஹரி!
அஜித், விஜய்யை இயக்கத் தயார் - ஹரி!

அஜித், விஜய்யை இயக்கத் தயாராக இருக்கிறேன் என்று இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

'பூஜை' படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதுகுறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காகப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசினார் ஹரி.

'' இதுவரைக்கும் 12 படங்களை இயக்கி முடித்துவிட்டேன். 13வது படமாக 'பூஜை' வெளிவர இருக்கிறது. அடுத்து சூர்யாவுடன் இணையப்போகிறேன். 

அஜித், விஜய்க்கும் படம் இயக்கத் தயாராக இருக்கிறேன். கதை, கால்ஷீட், தயாரிப்பாளர் என்று எல்லாம் சரியாக அமைந்தால் கண்டிப்பாக படம் இயக்குவேன் ''  என்றார்.