Published:Updated:

தீபாவளிப் பட்டாசு ரெடி! 'கத்தி' பட அப்டேட் சொல்லும் அனிருத்!

விகடன் விமர்சனக்குழு
தீபாவளிப் பட்டாசு ரெடி! 'கத்தி' பட அப்டேட் சொல்லும் அனிருத்!
தீபாவளிப் பட்டாசு ரெடி! 'கத்தி' பட அப்டேட் சொல்லும் அனிருத்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ் நடித்துள்ள படம்ம் 'கத்தி'. ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பாடல்கள் ஏற்கெனவே ஹிட்டடித்த நிலையில், தற்போது பின்னணி இசைக்கான வேலைகளை முடித்திருக்கிறார் அனிருத். இதை ட்விட்டரில் அனிருத் தெரிவித்துள்ளார்.

'' வெற்றிகரமாக 'கத்தி' படத்துக்கான பின்னணி இசை கோர்ப்புப் பணிகளை முடித்துவிட்டேன். தீபாவளிக்குப் பட்டாசு ரெடி!'' என்று ட்விட் செய்துள்ளார்.

'கத்தி' படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22ம் நாள் 'கத்தி' ரிலீஸ் ஆகிறது.