Published:Updated:

நாங்க அவங்க இல்லை!

விகடன் விமர்சனக்குழு
நாங்க அவங்க இல்லை!
நாங்க அவங்க இல்லை!

‘ஏற்கெனவே அவிய்ங்களுக்கும் நமக்கும் வாய்க்கா தகராறு’ என்பது மாதிரி கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் ‘கேப்பா’ நிக்குது பரப்பன அக்ரஹாரா. இதுல இது வேறயா?’ என்று முணுமுணுக்கிறார்கள். மக்கா... இது அரசியல் மேட்டர் இல்லீங்க... ‘ஆனா, சினிமாவுக்குள்ள புதுந்துவிட்ட அரசியல்’ என்று இது சம்பந்தமாக காட்டமாகப் பேட்டி கொடுத்துள்ளார் கன்னடத்து நடிகை ஹர்ஷிகா பூனாச்சா.

‘பிரதர்... டக்குனு விஷயத்துக்கு வாங்க’னு நீங்க சொல்றது கேட்குது.

விஷயம் பழசுதான். இந்த சீனில் ஹீரோ - வழக்கம்போல நம்ம சிம்புதான்! சென்ற மாதம் மலேசியாவில் நடந்த சைமா (siima) அவார்டு ஃபங்ஷனில் கலந்து கொள்ளச் சென்றவர்களில் கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சாவும், நம்மூர் எஸ்டிஆரும் இருவர்.

அங்குள்ள மலேசிய ஹோட்டல் ஒன்றில், சிம்புவும் ஹர்ஷிகாவும் கட்டிப்பிடித்து உம்மா கொடுப்பதுபோன்ற ஒரு வீடியோ, வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்டர்நெட் என்று வைரலாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. விஷயம் கேள்விப்பட்ட சிம்பு, ‘நமக்குத்தான் இது புதுசு இல்லையே’ என்பது மாதிரி அசால்ட்டாக இருந்து விட்டார். ஆனால், நம்ம பயலுகதான் பாய்சன் கிடைச்சாலே பாயாசம் மாதிரி சாப்பிடுவாய்ங்களே? பாயாசமே கிடைச்ச மாதிரி பீல் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க!?

கடந்த ஒரு மாதத்தில், ‘ஐ’ டீஸரை விட அதிகம் பேர் ஷேர் செய்யப்பட்ட வீடியோவாகி புகழ் பெற்றுவிட்டது மேற்படி விஷயம். ரொம்ப நாளாகப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஹர்ஷிகா, ஒரு கட்டத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கி எழுந்து ட்வீட்டி விட்டது ப்யூட்டி.

நாங்க அவங்க இல்லை!

‘‘சில நாட்களுக்கு முன்பு, நான் இந்த வீடியோவை நன்றாகப் பார்த்தேன். சத்தியமாக அது நாங்கள் இல்லை. சில வேலை வெட்டி இல்லாதவர்கள் பண்ணிய முட்டாள்தனமான செயல் இது. வேண்டுமென்றே எங்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் இப்படிச் செய்திருக்கிறார்கள். நீங்கள் விளையாடுவதற்கு என் போன்ற நடிகைகளின் கேரியர்தான் கிடைத்ததா?’’ என்று காட்டமாக ட்வீட்டி இருக்கிறார். மேலும், சிம்புவும் நானும் அப்படிப்பட்ட நண்பர்கள் கிடையாது; எங்களுக்குள் அப்படி எந்த எண்ணமும் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

சிம்புவும் போனா போகுது என்று இப்போது இந்த வீடியோ பதிவு பற்றி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

- தமிழ்