Published:Updated:

ஜப்பான் பறந்த ஜி.வி.பிரகாஷ் - ஶ்ரீதிவ்யா!

விகடன் விமர்சனக்குழு
ஜப்பான் பறந்த ஜி.வி.பிரகாஷ் - ஶ்ரீதிவ்யா!
ஜப்பான் பறந்த ஜி.வி.பிரகாஷ் - ஶ்ரீதிவ்யா!

கல்சன் மூவிஸ் தயாரிக்கும் முதல் படம் 'பென்சில்'. ஜி.வி.பிரகாஷ் , ஸ்ரீதிவ்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 25 பேர் கொண்ட குழு படத்தின் இரண்டு பாடல்களைப் படம்பிடிக்க ஜப்பான் டோக்கியோவிற்கு சென்றுள்ளனர்.

கவிஞர் தாமரை வரிகளில் ''கண்களிலே கண்களிலே கடுகளவு தெரிகிறதே” மற்றும் “யாரை போலும் இல்லா நீயும், எல்லோர் போலும் உள்ள நானும்” என்ற இரண்டு பாடல்களுக்கு ஜி.வி பிரகாஷ் குமாரும், ஸ்ரீ திவ்யாவும் டான்ஸ் ஆடுகின்றனர்.

இப்பாடல்களில் இதுவரை யாரும் பார்த்திராத ஜப்பானின் இயற்கையின் அழகையும், நகரத்தின் ஒளிவிளக்குகளையும் கோபி அமர்நாத் தன் ஒளிப்பதிவில் காண்பிக்க உள்ளார்.

மணி நாகராஜ் இயக்கும் 'பென்சில்' அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.