Published:Updated:

சூர்யாவை இயக்கும் ரஞ்சித்!

விகடன் விமர்சனக்குழு
சூர்யாவை இயக்கும் ரஞ்சித்!
சூர்யாவை இயக்கும் ரஞ்சித்!

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களை இயக்கிய ரஞ்சித் அடுத்து சூர்யாவை வைத்துப் படம் இயக்க உள்ளார்.

'மெட்ராஸ்' படம் அழுத்தமான தலித் அரசியல் பேசும் படம் என்று பாராட்டப்பட்டு வருகிறது. கார்த்திக்கு இந்தப் படம் நல்ல மரியாதையைக் கொடுத்தத. படத்தைப் பார்த்த ரஜினி ரஞ்சித்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ரஞ்சித் அடுத்த படம் இயக்கத் தயாராகிவிட்டார். இதில் ஹீரோவாக சூர்யா நடிக்கிறார். டைட்டில் இன்னும் வைக்கப்படவில்லை.

ஹீரோயின் உட்பட மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. சந்தோஷ் நாராயணனே இப்படத்துக்கும் இசையமைப்பார் என்று சொல்லப்படுகிறது.

'மாஸ்', விக்ரம் குமார் , ஹரி படங்களுக்குப் பிறகு சூர்யா ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.