Published:Updated:

ஆஸ்கர் நாயகனுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்!

Vikatan Correspondent
ஆஸ்கர் நாயகனுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்!
ஆஸ்கர் நாயகனுக்கு மீண்டும் டாக்டர் பட்டம்!

’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கர்களைப் பெற்ற பிறகும் , ஏ.ஆர்.ரஹ்மானின் விருதுப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

பாஸ்டனிலுள்ள பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக் ரஹ்மானுக்கு  டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. அதோடு இந்தியாவிலிருந்து இந்த கல்லூரிக்குப் படிக்க வரும் மாணவர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயரில் ஸ்காலர்ஷிப் வழங்க உள்ளதாகவும் பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 24 அன்று பாஸ்டனிலுள்ள பெர்க்லீ காலேஜ் ஆஃப் மியூசிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுடன் இணைந்து இசைக் கச்சேரி ஒன்றையும் நடத்தியுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

இசை நிகழ்ச்சி நடைபெற்றதும், விழாவின் நிறைவுப் பகுதியாக ஏ.ஆர். ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விழாவில் ஏற்புரையாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கம்போல் ’எல்லாப்புகழும் இறைவனுக்கே’ என்பதை சொல்லத்தவறவில்லை.