Published:Updated:

கோவையில் ‘கத்தி’ வெற்றிவிழா!

விகடன் விமர்சனக்குழு
கோவையில் ‘கத்தி’ வெற்றிவிழா!
கோவையில் ‘கத்தி’ வெற்றிவிழா!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ,சமந்தா நடித்து வெளியான படம் ’கத்தி’. தீபாவளியன்று பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே வெளியாகிய படம்  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

படம் ரிலீஸான முதல்நாளே ரூ.23.8 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது.தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா  மற்றும் வெளிநாடுகளிலும் 'கத்தி' நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

இதனையடுத்து 'கத்தி' படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட உள்ளனர். கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் இன்று 'கத்தி' படத்தின் வெற்றிவிழா நடைபெறுகிறது. இதில் விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் பங்கேற்கிறார்கள்.

‘கத்தி’ வெளியீட்டிற்குப் பிறகு விஜய் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சியும் இதுவே.