Published:Updated:

அனிருத்துக்குப் பரிசு தந்த விஜய்!

விகடன் விமர்சனக்குழு
அனிருத்துக்குப் பரிசு தந்த விஜய்!
அனிருத்துக்குப் பரிசு தந்த விஜய்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்த 'கத்தி' படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. கதிரேசன், ஜீவானந்தம் என்று இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்தார். 

 விவசாயிகள் பிரச்னை, தண்ணீர் பிரச்னை என்று சமீபத்திய பிரச்னைகளை பதிவு செய்த விதம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சமூக அக்கறையுள்ள படம் என்று மக்கள் பாராட்டி வருகின்றனர்.

அனிருத்துக்குப் பரிசு தந்த விஜய்!

அனிருத் இசையில் 'கத்தி' பாடல்களும் ஹிட்டடித்தன. இந்நிலையில் அனிருத்துக்கு அழகான பியானோ ஒன்றைப் பரிசாகத் தந்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார் விஜய்.

'' 'கத்தி' ஆல்பத்துக்காகவும், படம் ஹிட் ஆனதற்காகவும் இந்த பியானோவை விஜய் சார் பரிசாக அளித்துள்ளார். விஜய் சாருக்கு நன்றி'' என்று ட்விட்டரில் அனிருத் ட்விட் செய்துள்ளார்.