Published:Updated:

அக்டோபர் 30ல் ரஜினிமுருகன் ஷூட்டிங் !

விகடன் விமர்சனக்குழு
அக்டோபர் 30ல் ரஜினிமுருகன் ஷூட்டிங் !
அக்டோபர் 30ல் ரஜினிமுருகன் ஷூட்டிங் !

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரஜினிமுருகன்' படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 30ல் தொடங்க உள்ளது.

'எதிர்நீச்சல்' இயக்குநர் துரை. செந்தில்குமார் இயக்கும் படம் 'காக்கிச் சட்டை'. இதில் சிவகார்த்திகேயன் போலீஸாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் ஆக்‌ஷனில் கால் பதிக்க இருக்கிறார் சிவா.

சிவாவுக்கு ஜோடியாக ஶ்ரீதிவ்யா நடிக்கிறார். தனுஷ் தன் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலம் 'காக்கிச் சட்டை' படத்தைத் தயாரிக்கிறார்.

'காக்கிச் சட்டை' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'ரஜினிமுருகன்'. 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' இயக்குநர் பொன் ராம் இப்படத்தை இயக்குகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், ஈராஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. அக்டோபர் 30ல் காரைக்குடியில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது.