Published:Updated:

பூஜாவுக்குக் கல்யாணம்!

Vikatan Correspondent
பூஜாவுக்குக் கல்யாணம்!
பூஜாவுக்குக் கல்யாணம்!

இயக்குனர் சரண் இயக்கத்தில் 'ஜே ஜே' படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதன் பின்னர் ’அட்டகாசம்’, ’தம்பி’, ’பொறி’, ’ஓரம்போ’, ’நான் கடவுள்’ ,’விடியும் முன்’ உள்ளிட்ட பல படங்களிலும்,  மலையாளம், சிங்களம், ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் ஆகிய ஐந்து மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட  பூஜாவுக்கு, இலங்கையைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

நடிகை பூஜாவைத் திருமணம் செய்யவிருப்பவர் தீபக் சண்முகநாதன் என்பவர். இவர் இலங்கைத் தமிழர்.  ஏற்கனவே பூஜாவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிவு செய்யப்பட்டாலும், இன்னும் ஒரு வருடம் கழித்துதான் திருமண தேதி முடிவு செய்யப்படும் என பூஜாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது நடிகை பூஜா, ’கடவுள் பாதி மிருகம் பாதி' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.