Published:Updated:

அஜித்துக்குப் பாட்டெழுதும் விக்னேஷ் சிவன்!

விகடன் விமர்சனக்குழு
அஜித்துக்குப் பாட்டெழுதும் விக்னேஷ் சிவன்!
அஜித்துக்குப் பாட்டெழுதும் விக்னேஷ் சிவன்!

சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடித்த 'போடா போடி' படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். தற்போது தனுஷின் வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 'நானும் ரௌடிதான்' படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதியும், நயன்தாராவும் நடிக்கும் படம் இது.

இதற்கிடையில், கௌதம் மேனன் இயக்கும் 'தல 55' படத்தில் அஜித்துக்காக ஒரு ஓப்பனிங் பாடலை எழுதி இருக்கிறார் விக்னேஷ் சிவன். 'அதாரு அதாரு உதாரு உதாரு' என அப்பாடல் தொடங்குகிறது.

இந்தப் பாடலுக்கு அஜித்தும், அருண் விஜய்யும் டான்ஸ் ஆடுகிறார்கள். சதீஷ் இந்தப் பாடலுக்கு கொரியோகிராஃபி செய்கிறார். இதை ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார் விக்னேஷ் சிவன்.

ஏற்கெனவே, அனிருத் இசையில்  'சான்ஸே இல்லை - சென்னை' ஆல்பத்துக்காக விக்னேஷ் சிவன் பாடல்களை எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.