Published:Updated:

தனுஷுக்கு ஜோடியாகிறாரா த்ரிஷா?

Vikatan Correspondent
தனுஷுக்கு ஜோடியாகிறாரா த்ரிஷா?
தனுஷுக்கு ஜோடியாகிறாரா த்ரிஷா?

’வேலையில்லா பட்டதாரி’ சமீபத்தில் நூறாவது நாளை எட்டியது. தனுஷ், அமலா பால் நடிப்பில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இப்படம் அனைத்து மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘அனேகன்’ மற்றும் இந்தியில் பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்புகளும் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 

இதனையடுத்து மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்க இருக்கிறாராம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.