Published:Updated:

நான்கு மொழிகளில் ஹீரோயினாக நடிக்கும் தன்ஷிகா !

நான்கு மொழிகளில் ஹீரோயினாக நடிக்கும் தன்ஷிகா !
நான்கு மொழிகளில் ஹீரோயினாக நடிக்கும் தன்ஷிகா !

ஜெயம் ரவி அமலாபால் நடிப்பில் 'நிமிர்ந்து நில்' படத்தைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ’கிட்ணா’ என்ற படத்தை எடுக்க உள்ளார் சமுத்திரக்கனி.

இப்படம் இருவிதமாக எடுக்கப்பட உள்ளது. இப்படத்தை இரண்டே கால் மணி நேரம் ஓடக்கூடிய படமாகவும், 3 மணி நேரம் ஓடக்கூடிய ஒரு படமாகவும் என இரு விதத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் சமுத்திரக்கனி.

நான்கு மொழிகளில் ஹீரோயினாக நடிக்கும் தன்ஷிகா !

இதுவரை ஒரு படம் இரண்டு விதமாக எடுக்கப்பட்டதில்லை என்பதால் சமுத்திரக்கனியின் ’ கிட்ணா’ தான் இரு வேறு பாணி படத்திற்கு முன்னோடியாக திகழும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் மற்றும் மலையாளத்தில் சமுத்திக்ரகனி நாயகனாக நடிக்கிறார். தெலுங்கு, கன்னடப் படங்களில் கிஷோர் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் அனைத்து மொழிகளிலும் நாயகியாக தன்ஷிகா நடிக்கிறார்.