Published:Updated:

உன்னிகிருஷ்ணன் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்!

Vikatan Correspondent
உன்னிகிருஷ்ணன்  குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்!
உன்னிகிருஷ்ணன் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ,சமந்தா நடித்து வெளியான படம் ’கத்தி’. தீபாவளியன்று பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே வெளியாகிய படம்  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

இதனால், கோவையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் இன்று 'கத்தி' படத்தின் வெற்றிவிழா இன்று மாலை (அக்டோபர் 27) நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்றார்.

உன்னிகிருஷ்ணன்  குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியுதவி அளித்த விஜய்!

விஜய் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்யும்போது தவறி விழுந்த கேரளாவைச் சார்ந்த உன்னி கிருஷ்ணன் குடும்பத்தினர் விஜய்யை கோவையில் சந்தித்தனர்.

உன்னி கிருஷ்ணன் இறப்புக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும், உன்னி கிருஷ்ணன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதோடு, 3 லட்சம் நிதியுதவி அளித்தார்.