Published:Updated:

தனுஷை குழப்பிய ’டங்காமாரி!’

Vikatan Correspondent
தனுஷை குழப்பிய ’டங்காமாரி!’
தனுஷை குழப்பிய ’டங்காமாரி!’

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் , அமைரா தஸ்தூர் இருவரும் நான்கு கெட்டப்களில் நடித்து வரும் படம் ‘அனேகன்’.

படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். இப்படத்தின் இசை சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக ’டங்காமாரி’ என்ற பாடல் சென்னை தமிழில் சற்று வித்தியாசமான வரிகளுடன் எல்லோரையும் கவர்ந்துள்ளது.

இப்பாடலை கேட்ட பலருக்கும் ’டங்காமாரி’ என்றால் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை வழக்கம் போல் ஹாரிஸ் ஜெயராஜின் ‘ஒமகாசியா’, ‘ஹஸ்லி ஃபிஸ்லி’ போன்று இதிலும் அந்த பாணியிலான வார்த்தையை பயன்படுத்தியுள்ளாரா? என சிலர் கேள்வி எழுப்பினர்.

ஏன் தனுஷிற்கு கூட என்ன அர்த்தம் என்று தெரியாத நிலையில் பாடலாசிரியர் ரோகேஷிடம் கேட்டு அறிந்து கொண்டாராம்.’டங்காமாரி’ என்றால் மாத்தி மாத்தி பேசுபவர்களை அப்படி தான் குறிப்பிடுவார்கள் என்று கூறி தெளிவுப்படுத்தியுள்ளார் ரோகேஷ்.