Published:Updated:

பத்மப்ரியாவுக்கு கல்யாணம்!

பத்மப்ரியாவுக்கு கல்யாணம்!
பத்மப்ரியாவுக்கு கல்யாணம்!

'தவமாய் தவமிருந்து', 'பட்டியல்', 'சத்தம் போடாதே' போன்ற பல தமிழ் படங்களிலும், நிறைய மலையாள படங்களிலும் நடித்தவர் பத்மப்ரியா.

இவருக்கு இன்று மும்பையில் உறவினர்கள் சில நண்பர்கள் மத்தியில் மிகவும் எளிமையான முறையில் ஜாஸ்மின் என்பவரோடு திருமணம் நடைபெற உள்ளது.

படிப்பிற்காக நியூயார்க் சென்றிருந்த நடிகை பத்மப்ரியா அங்கே ஜாஸ்மினுடன் ஏற்பட்ட சந்திப்பில் அவருடன் காதல் வயப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மெக்கானிக்கல் இன்ஜியரிங் படித்துள்ள பத்மப்ரியாவின் காதலர் ஜாஸ்மின் தற்போது அரசுத்துறை ஒன்றில் பணியாற்றி வருவதாகக் கூறுகிறார்கள்.