Published:Updated:

பிரம்மாண்ட செட்டில் விஜய் 58!

Vikatan Correspondent
பிரம்மாண்ட செட்டில் விஜய் 58!
பிரம்மாண்ட செட்டில் விஜய் 58!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா ஸ்ருதி ஹாஸன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ’விஜய்58’.

நட்ராஜ் ஒளிப்பதிவில் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது இந்த படம். இதுவரை விஜய் நடிக்காத பாத்திரம் மற்றும் படமாக இந்த படம் இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். 

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை, பண்ணையூர் அருகே போடப்பட்டுள்ள மாபெரும் செட்டில் துவங்கியது.

பிரம்மாண்ட செட்டில் விஜய் 58!

100 நடனக் கலைஞர்களுடன் விஜய் பங்கேற்கும் ஒரு பாடலின் படப்பிடிப்பும் நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 45 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, கிச்சா சுதீப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி ஹன்சிகாவின் அம்மா வேடத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.